Monday 10 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 11.06.2024 (செவ்வாய்)

 


தமிழ் செய்திகள்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜூன் 14 இல் இத்தாலி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஜி7 அமைப்பின் 50வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13 ஆம்  தேதி தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி 3 வது முறையாக மீண்டும் பிரதமரான நிலையில் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

இந்திய ரிசர்வ் வங்கி ஜி செக் மொபைல் ஆப், ப்ரவா போர்டல், பின்டெக் களஞ்சியம் ஆகிய மூன்று முக்கிய நிதி சார்ந்த பரிவர்த்தனை முயற்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

 G-Sec மொபைல் ஆப் என்பது சில்லறை முதலீட்டாளர்கள் ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தி அரசாங்கப் பத்திரங்களில் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.

PRAVAAH போர்டல் என்பது தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கான ஒரு மையப்படுத்தப்பட்ட இணைய அடிப்படையிலான தளம், RBI யிடமிருந்து அங்கீகாரங்கள், உரிமங்கள் அல்லது ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு விண்ணப்பிக்கிறது, இது விண்ணப்பங்களை செயலாக்குவதில் செயல்திறனை மேம்படுத்துகிறது.

ஃபின்டெக் களஞ்சியம் என்பது இந்திய ஃபின்டெக் நிறுவனங்களுக்கான தரவுக் களஞ்சியம், இந்தத் துறையை நன்றாகப் புரிந்துகொள்ளவும், பொருத்தமான கொள்கைகளை வடிவமைக்கவும் உதவும். கூடுதலாக, ஆர்பிஐ-ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கான எம்டெக் களஞ்சியம், AI மற்றும் பிளாக்செயின் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதைக் கண்காணிக்கும்.

ஜூன் 11, 2024 அன்று காலை 5:00 மணிக்கு திருச்சி விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் புதிய ஒருங்கிணைந்த டெர்மினலுக்கு மாற்றப்படுகிறது.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் கடலோர மாவட்டங்களுக்கு கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. கடலில் எந்த அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவது 'கள்ளக்கடல்' எச்சரிக்கையாகும்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 18 கிமீ நீளமுள்ள நிலத்தடி சுரங்கப் பாதையை பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் 1.7.2024 முதல் அமலுக்கு வருகிறது.

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

English News

Prime Minister Narendra Modi will visit Italy on June 14 to attend the G7 Summit. The 50th G7 summit will begin on the 13th in Fasano, Italy. This will be Prime Minister Narendra Modi's first foreign trip after becoming Prime Minister for the 3rd term.

The Reserve Bank of India has launched three major financial transaction initiatives namely G-sec Mobile App, Pravaah Portal and PinTech Repository.

 The G-Sec mobile app enables retail investors to transact in government securities using smartphones.

PRAVAAH Portal is a centralized web-based platform for individuals or organizations applying for authorizations, licenses or regulatory approvals from RBI, which improves efficiency in processing applications.

The FinTech Repository is a data repository for Indian FinTech companies to better understand the sector and help formulate appropriate policies. Additionally, the MTech repository for RBI-regulated companies will monitor the adoption of emerging technologies such as AI and blockchain.

On June 11, 2024 at 5:00 AM all operations at Trichy Airport are shifting to the new integrated terminal.

It has been decided to provide financial assistance for construction of 3 crore houses in rural and urban areas under the Pradhan Mantri Awas Yojana. In the first Union Cabinet meeting chaired by Prime Minister Modi, this decision has been reached to build 3 crore more houses while 4.21 crore houses have been built in the last 10 years.

A high tide alert has been issued for the coastal districts of Kanyakumari, Nellai, Thoothukudi and Ramanathapuram. It is a warning is when there are sudden strong winds and rough seas at sea without any warning signs.

Bengaluru Corporation is planning an 18 km long underground tunnel to reduce traffic congestion in Bengaluru.

The new increased electricity tariff in Tamil Nadu will be effective from 1.7.2024.

India won the T20 World Cup match against Pakistan by 6 runs.

Spain's Carlos Algarz won the French Open tennis title for the first time in men's category.

No comments:

Post a Comment