Sunday, 30 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 01.07.2024 (திங்கள்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1)                  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

2)                  கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

3)                  கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் மற்றும் பத்து லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

4)                  அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் பணி நிரவல் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

5)                  வரும் கல்வியாண்டிலிருந்து கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் தேர்வுகள் துவங்கி முடிவுகள் வெளியாகும்.

6)                  ஒவ்வொருவரும் மரங்களை வளர்த்து பூமித்தாயைக் காக்க வேண்டும் என்று பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

7)                  தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8)                  மகாராஷ்டிராவின் முதல் பெண் தலைமைச் செயலாளராக சுஜாதா சவுனிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

9)                  ஜியோ, ஏர்டெல்லைத் தொடர்ந்து வோடாபோன் நிறுவனமும் அலைபேசி கட்டணங்களை உயர்த்தியது.

10)              நைஜீரியாவில் மூன்று இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 18 பேர் பலியாகினர்.

 English News

1) Team India led by Rohit Sharma won the T20 World Cup after winning the match against South Africa.

2) The Chief Minister has said that the government is committed to completely eradicate the sale of fake liquor.

3) An amendment is to be introduced to impose life imprisonment and a fine of Ten lakh for producing fake liquour.

4) The school education department has announced that excess teachers working in government aided schools can be posted outside the district.

5) From the next academic year, the examinations will be started simultaneously in Arts and Science colleges and the results will be released.

6) The Prime Minister appealed to everyone to plant trees and save the mother earth in the Mind Voice program.

7) Meteorological Department has said that there is a chance of rain in Tamil Nadu for the next five days.

8) Sujata Saunik has been appointed as the first woman Chief Secretary of Maharashtra.

9) After Jio, Airtel, Vodafone also hiked mobile tariffs.

10) 18 killed in three blasts in Nigeria.

No comments:

Post a Comment