Saturday, 1 June 2024

ஆறு கோள்களைக் காணும் அரிய நிகழ்வு!

கோள்களை அடுத்தடுத்துக் காணும் அரிய நிகழ்வு கோள்களின் தொடர்வரிசை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் SYZYGY என் இந்நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

இப்படி ஆறு கோள்களின் அரிய அணிவகுப்பை நீங்கள் சூன் 3, 4 ஆகிய தேதிகளில் காணலாம். எப்போது காணலாம் என்றால் சூரியன் உதிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகக் காணலாம். வெறும் கண்ணால் ஒரு சில கோள்களை மங்கலாகக் காணலாம். தொலைநோக்கி மூலமாக ஆறு கோள்களையும் தெளிவாகக் காணலாம். அப்படி எந்தெந்தக் கோள்களைக் காணலாம் என்றால்,

1. வியாழன்,

2. புதன்,

3. செவ்வாய்,

4. யுரேனஸ்,

5. சனி,

6. நெப்ட்யூன் ஆகிய ஆறு கோள்களைக் காணலாம்.

பூமியிலிருந்து காணும் போது ஒரே நேர்க்கோட்டில் இக்கோள்கள் தெரிவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுகிறது. ஆனால் இக்கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment