இந்தியாவில்
தயாரிக்கப்பட்ட நாகாஸ்திரா-1 என்ற நவீன ட்ரோன் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவசர
கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்திய ராணுவம் 480 லோட்டர் வெடிமருந்து அடங்கிய
ட்ரோன்களை வாங்குவதற்கு இஇஇஎல் நிறுவனத்திடம் கொள்முதல் ஆணை கொடுத்தது. தற்போது,
முதல் தொகுப்பாக ராணுவத்திடம் 120 ட்ரோன்களை அந்த நிறுவனம் வழங்கியுள்ளது.
நாகாஸ்திரா
யுஏவி அமைப்பு வான்வெளியில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.
மற்ற
ஆயுதங்களைப் போலல்லாமல் நாகாஸ்திரா தேவைப்படின் தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் திறன்கொண்டது.
திரும்பவும் அந்த ட்ரோனை மீட்டெடுக்க முடியும்.
இலக்கு
கண்டறியப்படாவிட்டால் ட்ரோன் செயல்பாட்டை நிறுத்தி, பாராசூட்டை பயன்படுத்தி மென்மையாக
தரையிறக்கம் செய்து அதனை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மறுபயன்பாட்டு
அம்சங்களில் முன்னேறிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களை விட நாகாஸ்திரா பல அதிநவீன
தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியது.
No comments:
Post a Comment