Tuesday, 18 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 19.06.2024 (புதன்)

 


தமிழ் செய்திகள்

இந்திய ராணுவத்துக்காக 45000 ரூபாய் கோடியில் 156 ஹெலிகாப்டர்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட உள்ளன. இராணுவ பயன்பாட்டுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும்.

நீட் தேர்வில் நடைபெறும் சிறிய அலட்சியத்திற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகமெங்கும் ரவுடிகளைக் கண்காணிக்கும் பருந்து செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜிசாட்-என்2 திட்டம் முலம் வினாடிக்கு 48 ஜிபி வேகத்தில் இணைய சேவையை வழங்க முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 20000 கோடி ரூபாயைப் பிரதமர் நேற்று விடுவித்தார். இதன் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் சென்று சேர்ந்திருக்கும்.

 English News

156 helicopters are to be purchased from Hindustan Aeronautical Company at a cost of Rs 45,000 crore for the Indian Army. This is the first time that so many helicopters are being produced indigenously at the same time for military use.

The Supreme Court has ordered strict action for even minor negligence in NEET examination.

‘PARUNTHU’ app to track anti social people across Tamil Nadu is soon to be launched.

ISRO has announced that the soon to be launched GSAT-N2 program will be able to provide internet speed of 48 Gbps.

20000 crore rupees was released by the Prime Minister under the Farmers Finance Scheme yesterday. Through this, 2000 rupees will be added to the farmers' bank accounts.

No comments:

Post a Comment