Thursday, 20 June 2024

NMMS – SAT – வடிவியல் பகுதிக்கான மாதிரி வினாக்கள் (பகுதி 1)

NMMS – SAT – வடிவியல் பகுதிக்கான மாதிரி வினாக்கள் (பகுதி 1)

1) கீழ்கண்டவற்றுள் எவை வடிவொத்த வடிவங்கள் அல்ல?

(1)   அனைத்து வட்டங்கள்

(2)   அனைத்து சதுரங்கள்

(3)   அனைத்து செவ்வகங்கள்

(4)   அனைத்து நாற்கரங்கள்

விடை : 4) அனைத்து நாற்கரங்கள்

விடைக்குறிப்பு : நாற்கரங்கள் வடிவொத்தவையாக அமையாது.

 

2) செங்கோண முக்கோணத்தின் கர்ணப் பக்கம் 85 செ.மீ. எனில் கீழ்கண்டவற்றுள் எச்சோடி மற்ற இரு பக்கங்களாக இருக்கும்?

(1)   35, 70

(2)   36, 77

(3)   36, 80

(4)   42, 43

விடை : (2) 36, 77

விடைக்குறிப்பு : பிதாகரஸ் மூன்றன் தொகுதி m2 + n2, 2mn, m2 - n2

இதன்படி 85ஐ உருவாக்கும் இரு வர்க்க எண்களின் கூடுதல் எதுவெனக் காண m = 9, n = 2 என அறிகிறோம். எனவே,

m2 + n2= 85,  2mn = 36, m2 - n2 = 77

 

3) கீழ்கண்ட எந்தப் பக்கங்கள் முக்கோணத்தை உருவாக்கும்?

(1)   23 செ.மீ, 17 செ.மீ, 8 செ.மீ.

(2)   42 செ.மீ, 10 செ.மீ, 5 செ.மீ.

(3)   6 செ.மீ, 7 செ.மீ, 16 செ.மீ.

(4)   8 செ.மீ, 7 செ.மீ, 16 செ.மீ.

விடை : (1) 23 செ.மீ, 17 செ.மீ, 8 செ.மீ.

விடைக்குறிப்பு : முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.

 

4) பின்வரும் எந்த வடிவத்திற்குச் சுழல் சமச்சீர்த் தன்மை உண்டு. ஆனால் சமச்சீர்க் கோடுகள் இல்லை?

(1)   சாய்சதுரம்

(2)   செவ்வகம்

(3)   இணைகரம்

(4)   இருசமபக்க முக்கோணம்

விடை : (3) இணைகரம்

விடைக்குறிப்பு : இணைகரத்திற்குச் சமச்சீர்க் கோடுகள் கிடையாது. அதன் சுழல் சமச்சீர் வரிசை 2.

 

5) வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் எவ்வாறு அமையும்?

(1)   விகித சமம்

(2)   சமமில்லை

(3)   சர்வசமம்

(4)   ஒத்தவை அல்ல

விடை : (1) விகிதசமம்

விடைக்குறிப்பு : வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் விகித சமமாக அமையும்.

 

6) கூற்று (அ) அனைத்து சர்வ சம முக்கோணங்களும் வடிவொத்தவை.

கூற்று (ஆ) அனைத்து வடிவொத்த முக்கோணங்களும் சர்வ சமம்.

(1)   கூற்று அ சரி

(2)   கூற்று ஆ சரி

(3)   கூற்று அ மற்றும் ஆ இரண்டும் சரி

(4)   கூற்று அ மற்றும் ஆ  இரண்டும் தவறு

விடை : (1) கூற்று அ சரி

விடைக்குறிப்பு : அனைத்து சர்வசம முக்கோணங்களும் வடிவொத்தவை. அனைத்து வடிவொத்த முக்கோணங்களும் சர்வ சமம் அல்ல.

 

7) கூற்று (அ) இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும் போது ஒத்த கோணங்கள் சமம்.

கூற்று (ஆ) குறுக்குவெட்டியின் ஒரு பக்கம் அமைந்த வெளிக்கோணங்கள் நிரப்புக்கோணங்கள்.

(1)   கூற்று அ சரி

(2)   கூற்று ஆ சரி

(3)   கூற்று அ மற்றும் ஆ இரண்டும் சரி

(4)   கூற்று அ மற்றும் ஆ  இரண்டும் தவறு

விடை : (1) கூற்று அ சரி

விடைக்குறிப்பு : குறுக்குவெட்டியின் ஒரு பக்கம் அமைந்த வெளிக்கோணங்கள் மிகை நிரப்புக் கோணங்கள்.

 

8) சரிவகம் வரைய ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எத்தனை அளவுகள் தேவை?

(1)   3

(2)   4

(3)   5

(4)   2

விடை : (2) 4

விடைக்குறிப்பு : சரிவகம் வரைய ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 4 அளவுகள் தேவை.

 

9) சாய்சதுரத்தின் பரப்பளவு காண உதவும் சூத்திரம் யாது?

(1)   ½d(h1+h2) சதுர அலகு

(2)   ½d(a+b) சதுர அலகு

(3)   ½d1d2 சதுர அலகு

(4)   bh சதுர அலகு

விடை : (3) ½d1d2 சதுர அலகு

விடைக்குறிப்பு : சாய்சதுரத்தின் பரப்பளவுக்கான சூத்திரம் ½d1d2 சதுர அலகு

 

10) எவ்வகை முக்கோணத்தின் முக்கோணத்தின் சுற்று வட்ட மையம் உள்புறமாக அமையும்?

(1)   குறுங்கோண முக்கோணம்

(2)   விரிகோண முக்கோணம்

(3)   செங்கோண முக்கோணம்

(4)   அனைத்து வகை முக்கோணம்

விடை : (1) குறுங்கோண முக்கோணம்

விடைக்குறிப்பு : குறுங்கோண முக்கோணத்தில் சுற்று வட்ட மையம் உள்புறமாகவும், விரிகோண முக்கோணத்தில் வெளிப்புறமாகவும், செங்கோண முக்கோணத்தில் கர்ணத்திலும் அமையும்.

No comments:

Post a Comment