இந்தியா
தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு.
உலகிலேயே
அதிக ஏழைகள் வசிக்கும் நாடும் இந்தியாதான்.
நூறு
ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வருமான ஏற்றத்தாழ்வு நிலவுவதும் உலகளவில் இந்தியாவில் மட்டும்தான்.
அமெரிக்காவைக்
கலக்கும் அதிகச் சம்பளம் வாங்கும் பொறியாளர்கள் இந்தியர்கள்தான். உலக அளவில் வேலையில்லாமல்
ஒரு நாட்டில் எண்பது சதவீதம் திண்டாடுவது இந்திய இளைஞர்கள்தான்.
உலகளவில்
வளர்ந்த நாடுகளில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள், ஏழைகள் பணக்கார நிலையை நோக்கிச்
செல்கிறார்கள்.
இந்தியாவில்
மட்டும்தான் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் பரம ஏழைகளாகிறார்கள்.
பல லட்சம்
கோடி சொத்து மதிப்போடு அம்பானியும் அதானியும் வசிக்கும் இந்தியாவில்தாவில்தான் ஒரு
வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத சப்பாணியும் அருக்காணியும் வசிக்கிறார்கள்.
உலகளவில்
இந்தியா ஒரு வித்தியாசமான நாடுதான் இல்லையா?!
No comments:
Post a Comment