Wednesday 5 June 2024

ஏன் வாசிப்பு முக்கியம் தெரியுமா?

 


ஒரு பள்ளியைத் திறப்பவர் நூறு சிறைச்சாலைகளை மூடுகிறார் என்கிறார் விக்டர் ஹியூகோ.

எங்கே ஒரு நூலகம் திறக்கப்படுகிறதோ அங்கே ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்கிறார் விவேகானந்தர்.

ஜொனாதன் ஸ்விப்ட் மூன்று வயது நிரம்புவதற்குள் பைபிளின் எந்த அத்தியாத்தையும் படித்துக் காட்டுவாராம்.

பிரடெரிக் மேயர்ஸ் ஆறு வயதில் விர்ஜில் என்ற நூலை வாசித்து முடித்திருக்கிறார்.

ஹென்றி பிராட்ஷா நான்னு வயதிற்குள் ஐநூறு புத்தகங்கள் உள்ள வீட்டு நூலகத்தில் வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

நான் நடக்கும் போது மட்டும்தான் வாசிக்க மாட்டேன் என்கிறார் சார்லஸ் லாம்ப்.

லண்டனின் நெரிசலான சந்து பொந்துகளில் நடக்கும் போதும் வேகமாகப் படித்துக் கொண்டு நடப்பாராம் மெக்காலே.

ஜான் வெஸ்ஸி தினமும் 100 மைல் குதிரை சவாரி செய்ய வேண்டிய நிலையில் குதிரை சவாரி செய்யும் போதே வாசித்துக் கொண்டிருப்பார்.

லாரன்ஸ் ஆப் அரேபியா எனப் புகழப்படும் லாரன்ஸ் ஒட்டகச்சவாரி செய்யும் போதே அரிஸ்டோபேனலின் படைப்புகளை வாசித்து முடித்தார்.

No comments:

Post a Comment