Monday 17 June 2024

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் – 18.06.2024 (செவ்வாய்)

 


தமிழ் செய்திகள்

உலகின் தலைசிறந்த பத்து பள்ளிகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. ஐந்து பள்ளிகளுள் தமிழகத்தின் மதுரைச் சேர்ந்த கல்வி சர்வதேச பள்ளி இடம் பெற்றுள்ளது.

கால தாமதமாக வருகை தரும் மத்திய அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்  பேசினார்.

நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியைத் தக்க வைக்கிறார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த பயணியர் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

ஆவின் பால் தினசரி விற்பனை மூன்று லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று வடகொரியா செல்கிறார்.

 English News

Five schools from India have made it to the list of top ten schools in the world. Kalvi International School from Madurai, Tamil Nadu is among the five schools.

The central government has warned that strict action will be taken against central government employees who arrive late.

The US security adviser who came to India met Prime Minister Narendra Modi.

Central government admits to malpractice in NEET exam. It has warned that strict action will be taken against those involved in irregularities.

Rahul Gandhi retains Raebareli constituency. According to reports, Priyanka Gandhi will contest from Wayanad constituency.

15 people were killed when a freight train collided with a standing passenger train in West Bengal.

The daily sales of milk have increased to three lakh litres.

Russian President Vladimir Putin is visiting North Korea today.

No comments:

Post a Comment