Tuesday 18 June 2024

2021 – 2022 NMMS – SAT – வடிவியல் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்

2021 – 2022 NMMS – SAT – வடிவியல்  பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள்

1) ‘டயமன்ட் கிராசிங்’ என்பது ………….. வடிவத்தைக் குறிக்கும்.

(1)   சதுரம்                                    (2) இணைகரம்

(3) சாய்சதுரம்                              (4) செவ்வகம்                                                                                             (2021 – 2022)

விடை : (3) சாய்சதுரம்

விடைக்குறிப்பு : சாய்சதுர வடிவம் குறித்த புரிதல்

காண்க : எட்டாம் வகுப்பு – கணக்கு – பக்கம் 202 முதல் 204

 

2) ஒரு முக்கோணத்தின் அதிகபட்ச கோணங்களின் எண்ணிக்கை

(1)   1                                              (2) 2

(3) 3                                                            (4) 4                                                                                                                                 (2021 – 2022)

விடை : (3) 3

விடைக்குறிப்பு : ஒரு முக்கோணம் என்பது மூன்று பக்கங்கள் மற்றும் மூன்று கோணங்களால் ஆனது.

காண்க : ஏழாம் வகுப்பு – பருவம் 2 – பக்கம் 70

 

3) என்ற குறியீடு உணர்த்துவது

(1)   சமம்                                                   (2) அசமம்

(3) ஒத்த                                                     (4) சர்வசமம்                                                                                                  (2021 – 2022)

விடை : (4) சர்வசமம்

விடைக்குறிப்பு : சர்வசமத்திற்கான குறியீடு    

காண்க : ஏழாம் வகுப்பு – பருவம் 2 – பக்கம் 81

 

4) ஒரு பொருள் அதன் மையத்தைப் பற்றி 3600க்குக் குறைவான கோணத்திற்குச் சுழற்றிய பின்பும் ஒரே மாதிரியாகத் தோன்றினால் அப்பொருள் ………….. தன்மையைக் கொண்டது எனக் கூறலாம்.

(1)   இடப்பெயர்வு சமச்சீர்                   (2) எதிரொளிப்பு சமச்சீர்

(3) சுழல் சமச்சீர்                                      (4) எதிரொளிப்புக் கோடு                           (2021 – 2022)

விடை : (3) சுழல் சமச்சீர்

விடைக்குறிப்பு : சுழல் சமச்சீருக்கான வரையறை

காண்க : ஏழாம் வகுப்பு – பருவம் 3 – பக்கம் 74

No comments:

Post a Comment