Saturday 1 June 2024

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பின் படி

பாஜக கூட்டணி 359 இடங்களையும்

காங்கிரஸ் கூட்டணி 154 இடங்களையும்

மற்றவை 30 இடங்களையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் டிவி கருத்துக் கணிப்பின்படி

பாஜக கூட்டணி 371 இடங்களையும்

காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களையும்

மற்றவை 47 இடங்களையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் நவ பாரத் டிவி கணிப்பின் படி

பாஜக கூட்டணி 352 இடங்களையும்

காங்கிரஸ் கூட்டணி  92 இடங்களையும்

மற்றவை 99 இடங்களையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ் டிவி கருத்துக் கணிப்பின் படி

பாஜக கூட்டணி 371 இடங்களையும்

காங்கிரஸ் கூட்டணி 125 இடங்களையும்

மற்றவை 47 இடங்களையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஜன்கி பாத் டிவி கருத்துக் கணிப்பின் படி

பாஜக கூட்டணி  362 முதல் 392 இடங்களையும்

காங்கிரஸ் கூட்டணி 141 முதல் 161 இடங்களையும்

மற்றவை 10 முதல் 20 இடங்களையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் மேட்ரிஸ் டிவி கருத்துக் கணிப்பின் படி

பாஜக கூட்டணி 353 முதல் 368 இடங்களையும்

காங்கிரஸ் கூட்டணி 118 முதல் 133 இடங்களையும்

மற்றவை 43 முதல் 48 இடங்களையும் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் வியூக நோக்கர்களின் கணிப்புகள்

ஐயான் பிரேமர் பாஜக கூட்டணி 305 இடங்களைப் பெறும் எனக் கணித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர் பாஜக கூட்டணி 303 இடங்களைப் பெறும் எனக் கணித்துள்ளார்.

யோகேந்திர யாதவ் பாஜக கூட்டணி 240 முதல் 260 இடங்களைப் பெறும் எனக் கணித்துள்ளார்.

சுர்ஜித் பாலா பாஜக கூட்டணி 330 இடங்களைப் பெறும் எனக் கணித்துள்ளார்.

தமிழ்நாட்டில் …

பாஜக கூட்டணி 2 முதல் 4 இடங்களையும்

இந்தியா கூட்டணி  33 முதல் 37 இடங்களையும்

(காங்கிரஸ் 13 முதல் 15 இடங்களையும், திமுக 20 முதல் 22 இடங்களையும்)

அதிமுக 0 முதல் 2 இடங்களையும் பெறும் என மை ஆக்சிஸ் இந்தியா கணித்துள்ளது.

இவையெல்லாம் கணிப்புகள் ஆகும். உண்மையான தேர்தல் முடிவுகளை நாளை வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அறிந்து கொள்ள முடியும். கணிப்புகளும் தேர்தல் முடிவுகளும் எந்த அளவுக்கு ஒத்து வரப் போகிறது என்பதை அறிய நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment