Monday, 1 June 2026

நிதானமாகப் பூக்கலாம்!

நிதானமாகப் பூக்கலாம்!

தோட்டம் போடுதல் என்பது இயற்கையோடு ஒரு கனெக்சனை ஏற்படுத்திக் கொள்ளும் அற்புதமான முயற்சி. அதைப் பலரும் ஸ்டேட்டஸ் வைப்பதற்கும், நான்கு பேரிடம் காட்டிப் பரவசப்படுத்துவதற்குமான ஒன்றாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களை நீங்களே பரவசப்படுத்திக் கொள்ளும் ஒரு பிரபஞ்ச செயல்.

அதனால் இந்த ஸ்லோ கார்டனிங் பற்றி நாம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

ஸ்லோ கார்டனிங் என்ற உடனே, ஏதோ சோம்பேறித்தனமாகச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து செடிகளை வேடிக்கை பார்ப்பது என்று நினைக்காதீர்கள். இது ஒரு மைண்ட்செட். செடிகளோடு சேர்ந்து நீங்களும் வளர்வதுதான் இந்தத் தத்துவம். இங்கே செக் லிஸ்ட் கிடையாது, அவசர ரிசல்ட் கிடையாது.

இயற்கை என்பது ஒரு பழைய காலத்து கடிகாரம் போல. அது தன் போக்கில்தான் ஓடும். அதை நாம் 5ஜி வேகத்திற்கு இழுக்க முடியாது.

எப்படி ஒரு கம்ப்யூட்டரில் ரேம் அளவைப் பார்த்து சாப்ட்வேர் போடுவோமோ, அதுபோல உங்கள் தோட்டத்தில் எங்கே வெயில் அடிக்கிறது, எங்கே நிழல் விழுகிறது என்று பாருங்கள்.

உங்களுக்குப் புல்வெளி வெட்டுவது பிடிக்கவில்லையா? விட்டுவிடுங்கள்! அதற்குப் பதில் காட்டுப் பூக்களை வளருங்கள். பட்டாம்பூச்சிகள் வரும். உங்கள் தோட்டம் உங்கள் கேரக்டரின் பிரதிபலிப்பு. அது பக்கத்து வீட்டுக்காரரைப் போல இருக்க வேண்டிய அவசியமில்லை.

நர்சரிக்குச் சென்று வளர்ந்த செடியை வாங்கி வந்து வைப்பது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போல. அதில் பசி அடங்கும், ஆனால் திருப்தி இருக்காது.

ஒரு விதையை நட்டு, அது முளைப்பதைக் கவனிப்பது ஒரு கிரியேஷன். அந்த மூலிகைச் செடி வளரும் போது வரும் மணம், நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பாக்கெட் புதினாவில் இருக்காது.

பூச்சிக் கொல்லிகளைத் தூக்கி எறியுங்கள். செடிகளுக்கு இடையே நண்பர்களை உருவாக்குங்கள். மண்ணை உரத்தால் நிரப்பாதீர்கள், மண்ணை மீளுருவாக்கம் செய்யுங்கள்.

தோட்டம் என்பது வெறும் பச்சை நிறம் மட்டுமல்ல.

காற்றில் இலைகள் அசையும் சத்தம், ஒரு சின்ன நீரூற்றின் சலசலப்பு இவற்றைக் கேளுங்கள்..

பழைய நினைவுகளைத்  தூண்டும் மணம் கொண்ட பூக்களை நுகருங்கள்.

ஜன்னல் ஓரம் பறித்த தக்காளி அல்லது துளசியைச் சுவையுங்கள்.

இயற்கையோடு சண்டை போடாதீர்கள், அதோடு கூட்டுச் சேர்ந்து யுனைடெட் கோல்  நோக்கிப் பயணம் செய்யுங்கள்.

கார்டன் சென்டருக்குப் போய் கிரெடிட் கார்டைத் தேய்க்கும் முன், உங்கள் ஸ்டோர் ரூமைப் பாருங்கள்.

பழைய டப்பாக்கள், மரப்பெட்டிகள் போன்றவை பறவைகளுக்கும் செடிகளுக்கும் சிறந்த வீடாக மாறும்.

சத்தம் போடும் பவர் டூல்களை ஓரங்கட்டி விட்டு, பாரம்பரியமான மண்வெட்டி, கலைக்கொத்து எடுத்தால் உங்கள் உடலுக்கும் ஒரு சின்ன எக்ஸர்சைஸ்.

களைகளை உங்கள் எதிரியாகப் பார்க்காதீர்கள். தேனீக்களுக்கு அவைதான்பிடித்தமான ஹோட்டல்!

நீங்கள் நிதானமாகத் தோட்டத்தில் நடக்கும்போதுதான், உங்கள் செடியில் என்ன நோய் இருக்கிறது, எங்கே பூச்சி அரித்திருக்கிறது என்று பார்க்க முடியும். அவசரம் அவசரமாகத் தண்ணீர் ஊற்றிவிட்டு ஓடினால் இதையெல்லாம் கவனிக்க முடியாது.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத லிஸ்ட் சென்டர் கிடையாது. செடிகள் வளர நேரம் எடுக்கும். அந்த நேரத்தை நாம் வெயிட்டிங் டைம் என்று நினைக்காமல், லிவிங் டைம் என்று ரசிக்க வேண்டும்.

இயற்கை ஒருபோதும் அவசரப்படுவதில்லை, ஆனாலும் எல்லாம் சரியாக நடக்கிறது, என்பார்கள். உங்கள் தோட்டமும் அப்படித்தான்.

இன்று மாலை உங்கள் தோட்டத்திலோ அல்லது பால்கனியிலோ ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்து பாருங்களேன். ஓர் எறும்பின் ஓட்டத்தையோ அல்லது ஒரு மொட்டு விரிவதையோ கவனியுங்கள். உங்கள் ஸ்லோ கார்டனிங் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

No comments:

Post a Comment