Thursday, 11 June 2026

ஒர்க் ப்ரம் பீஸ்!

ஒர்க் ப்ரம் பீஸ்!

நம் வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்த வேலை என்கிற வஸ்துவில்தான் கழிக்கிறோம். வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என ஆயுளின் பெரும் பங்கு ஆபீஸ் டேபிளிலேயோ, ஒர்க் ப்ளேஸ்லிலேயோ தேய்ந்து போகிறது.

ஆனால், அந்தச் சூழல், அது ஒர்க் ப்ரம் வீடோ அல்லது ஆபீஸோ உங்கள் மனநிலையைத் தீர்மானிக்கும் ஒரு ரிமோட் கண்ட்ரோல் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொஞ்சம் மைண்ட்புல் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால், உங்கள் ஒர்க் ஸ்பேஸை ஒரு அமைதிக் கூடமாக மாற்றலாம்.

முதலில் உங்கள் சீட்டில் அமருங்கள். கண்களை மூடிக்கொண்டு உங்கள் உடலோடு ஒரு சாட் செய்யுங்கள்.

முதுகு வலிக்கிறதா? மணிக்கட்டு டேபிளில் இடித்து மரத்துப் போகிறதா? டேபிளுக்கு அடியில் பழைய பைல் பாக்ஸ்களை அடுக்கி வைத்து, ஒவ்வொரு முறை காலை நீட்டும்போதும் அவை உங்கள் முட்டியில் இடிக்கிறதா?

இவை சின்ன விஷயங்கள் போலத் தோன்றும். ஆனால், இவை ஒவ்வொன்றும் உங்கள் மூளையின் பேக்கிரவுண்ட் மெமரியை உறிஞ்சும் மெல்லிய வைரஸ்கள்!

இப்போது கண்களைத் திறந்து பாருங்கள். சும்மா இல்லை, ஒரு துப்பறியும் நிபுணர் போலப் பாருங்கள்.

உங்கள் கீபோர்டு இடுக்குகளில் எவ்வளவு தூசி படிந்திருக்கிறது? ஸ்கிரீனில் எத்தனை விரல் ரேகைகள்?

உங்களைச் சுற்றி உங்களுக்குப் பிடித்த, உத்வேகம் தரும் பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? அல்லது வெறும் ஸ்டேப்ளர் பின்களும், பழைய டீ கப்புகளும்தான் மிச்சமா?

ஜன்னல் அழுக்காக இருக்கிறதா?

ஒரு டேபிள் லேம்ப் இருந்தால் வெளிச்சம் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருக்குமா?

கவனித்தால்தான் குறைகள் தெரியும்.

இவற்றையெல்லாம் கொஞ்சம் சரி செய்யுங்கள். சின்ன சின்ன மாற்றங்கள், பெரிய பெரிய முன்னேற்றங்கள்.

வாசனை என்பது மூளையின் உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு ஷார்ட்கட்.

ஒரு மூலிகை தேநீர் போட்டு அதன் வாசனையை ரசித்தபடி வேலையைத் தொடங்குங்கள். அந்த மணம் உங்கள் நரம்புகளைத் தட்டி எழுப்பும்.

ஆபீஸ் டெஸ்க் என்பது வெறும் மரம் அல்ல; அது உங்கள் போர்க்களம். அந்தப் போர்க்களத்தில் அமைதி நிலவினால்தான் உங்கள் அவுட்புட் பெர்பெக்ட் ஆக வரும்.

எல்லாம் சரியாத்தான் இருக்கு சார், என்று சொல்லாதீர்கள். ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்தால் தான் உங்கள் முதுகு சொல்லும் ரகசியம் உங்களுக்குப் புரியும்.

இன்று மாலை உங்கள் டேபிளுக்கு அடியில் இருக்கும் அந்தப் பழைய பெட்டிகளை அப்புறப்படுத்துங்கள். உங்கள் கால்களைச் சுதந்திரமாக நீட்டுங்கள்.

அந்தச் சின்ன இடைவெளி உங்கள் மனதிலும் ஒரு பெரிய ரிலாக்ஸை உருவாக்கும்.

உங்கள் கண் எதிரே உங்களை இன்ஷ்பிரேஷன் செய்யும் படங்கள் இருக்கட்டும்.

உங்கள் பீஸ்புல் ஒர்க் ஸ்பேஸ் அங்கிருந்து தொடங்கட்டும்!

****

No comments:

Post a Comment