அமானுஷ்யங்களின் அட்ரஸ்
அட்ரஸ் – 7
காது இல்லாத அரசன்!
ஆவியாக
வந்த அரசன், ஆவியைக் கண்டுபிடித்த கதை அறிய ஆர்வமாக உள்ளீர்களா?
இதோ
அந்த கதை, சாரி வரலாறு.
அப்போது
பெர்சியாவை ஆண்டவன் கேம்பிசஸ். இவன் மாவீரன் சைரஸின் மகன். கேம்பிசஸ் எகிப்து நாட்டின்
மீது போர் தொடுக்கப் போயிருந்தான்.
அவனுக்கு
ஒரு தம்பி இருந்தான், அவன் பெயர் பர்டியா. கேம்பிசஸுக்கு ஒருநாள் ஒரு பயங்கரமான கனவு
வந்தது. தன் தம்பி பர்டியா பெர்சிய அரியணையில் அமர்ந்து, அவன் தலை விண்மீன்களைத் தொடுவது
போல அந்தக் கனவு இருந்தது.
நம்ம
ஊர் ராஜாக்கள் கனவு கண்டால் உடனே ஜோசியரைக் கூப்பிடுவார்கள். ஆனால் கேம்பிசஸ் ஒரு சைக்கோ.
உடனே தன் ரகசிய ஏஜென்ட் ஒருவனை அனுப்பி, தம்பியை யாருக்கும் தெரியாமல் அண்டர் கிரவுண்டில்
போட்டுத் தள்ளச் சொன்னான். கொலையும் ரகசியமாக நடந்தது.
ஆனால்,
அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.
எகிப்தில்
இருந்த கேம்பிசஸுக்கு பெர்சியாவில் இருந்து ஒரு பிரேக்கிங் நியூஸ் வந்தது. "உங்கள்
தம்பி பர்டியா பெர்சியாவின் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்!"
கேம்பிசஸ்
ஷாக் ஆனான். "டேய், நான்தான் அவனைப் புதைக்கச் சொன்னேனே, அவன் எப்படி உயிரோட வந்தான்?
பேயா? ஆவியா?" என்று குழம்பி, உடனே பெர்சியாவுக்குக் கிளம்பினான்.
ஆனால்,
வழியிலேயே அவனது வாள் தவறுதலாக அவன் தொடையைக் கிழிக்க, செப்டிசீமியா ஏற்பட்டு கேம்பிசஸ்
இறந்துபோனான். வினை விதைத்தவன் வினை அறுத்தான் கான்செப்ட் வரலாற்றுக்கு ரொம்ப பிடித்தமானது
போலும்.
இங்கேதான்
என்ட்ரி ஆகிறார் நம்ம கதையின் வில்லன்.
பெர்சியாவில்
ஒரு மந்திரவாதிக் கூட்டம் இருந்தது. அவர்கள் ஜோசியம், மாந்த்ரீகம், ரகசிய சடங்குகளில்
கில்லாடிகள். அதில் பவ்பதி என்றொரு மந்திரவாதி இருந்தான். விசித்திரம் என்னவென்றால்,
அவனது முகம் அப்படியே செத்துப்போன இளவரசன் பர்டியா போல அச்சு அசலாக இருந்தது!
இதைத்தான்
சயின்ஸ்ல டாப்பில்கேஞ்சர் அதாவது உலகத்துல ஒரே மாதிரி இருக்கின்ற ஏழு பேர் என்கிறது.
ஆனால்,
இந்த மந்திரவாதிக்கு ஒரு சின்னக் குறை இருந்தது. ஏதோ ஒரு தப்புக்காக முன்னாடியே அவனோட
இரண்டு காதுகளையும் வெட்டியிருந்தார்கள்.
இந்தக்
காது இல்லாத மந்திரவாதி, இளவரசன் பர்டியா போல வேடமிட்டு, அரண்மனைக்குள்ளேயே அமர்ந்து
நாட்டை ஆளத் தொடங்கினான்.
அவன்
நிஜமான இளவரசன் இல்லை என்பதால், யாரிடமும் நேரில் பேச மாட்டான். எப்போதும் முகமூடி
அல்லது இருட்டில்தான் இருப்பான். ஜனங்கள் அவனை ஒரு அமானுஷ்ய சக்தி கொண்ட அரசனாகவே பார்த்தார்கள்.
காது
இல்லாத ஒருத்தன் நாட்டை ஆள்கிறான். யாரும் அவனைக் கண்டுபிடிக்கவில்லையா? பெர்சியன்ஸ்
அவ்வளவு டப்பாங்களா? என்றால்,
அங்கேதான்
டேரியஸ் உள்ளே வருகிறான்.
அப்போது
டேரியஸ் ஒரு சாதாரண ராணுவ அதிகாரி. அவனுக்கு ஏதோ இடிக்கிறதே என்று தோன்றியது. அந்தப்
போலி ராஜாவோட அந்தப்புரத்து ராணிகள்ல ஒருத்தி டேரியஸோட ரிலேடிவ். அவகிட்ட ஒரு சீக்ரெட்
மிஷன் கொடுத்தான்.
என்ன
மிஷன் என்றால், "ராஜா தூங்கும்போது அவனோட தலையில கை வச்சுப் பார். காது இருக்கான்னு
செக் பண்ணு!"
ராணியும்
அப்படியே செய்ய, அங்கே காதுகள் இல்லை!
மந்திரவாதியின்
சதி அம்பலமானது.
டேரியஸும்
அவனது நண்பர்கள் ஆறு பேரும் நள்ளிரவில் அரண்மனைக்குள் புகுந்து, அந்த மந்திரவாதியைக்
கொன்று, பெர்சியாவைக் காப்பாற்றினார்கள். இதுதான் டேரியஸ் மன்னனாக மாறிய கதை, சாரி
வரலாறு!
ஏஸ்கிலஸ்
நாடகத்தில் டேரியஸ் ஆவியாக வந்தான், ஆனா நிஜ ஹிஸ்ட்ரியில் டேரியஸ் ஒரு போலியான ஆவியைக்
கண்டுபிடித்துக் கொன்று விட்டுதான் மன்னனாகவே ஆனான்!
பயங்கரமான
அமானுஷ்ய வரலாறாக இருக்கிறதே என்கிறீர்களா?
இன்னும்
அமானுஷ்யங்கள் நிறைய இருக்கிறதே.
- அட்ரஸைத் தேடுவோம்.
*****

No comments:
Post a Comment