Monday, 29 June 2026

பேயின் பிரஸ்மீட்!

அமானுஷ்யங்களின் அட்ரஸ்

அட்ரஸ் – 6

பேயின் பிரஸ்மீட்!

இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பாக ஆவிகளை வைத்து ஒரு டிராமாவே ப்ளே பண்ணியிருக்கிறார்கள். அதன் அட்ரஸ் எதுவென்றால் அதுதான், கிமு 472 இன் ஏதென்ஸ் நகரம்.

அன்று அவர்களுக்கு நெட்பிளிக்ஸோ, அமேசான் பிரைமோ கிடையாது. நாடக மேடைகள் மட்டும்தான் ஒரே ஓடிடி. கிரேட்டர் டைனீஷியா திருவிழாவில் ஏதென்ஸ் நகரமே திரண்டிருக்கிறது. அங்கேதான் ஏஸ்கிலஸ் என்கிற அன்றைய த்ரில்லர் மன்னன், தன் புதிய ஸ்கிரிப்ட்டை அரங்கேற்றுகிறான். நாடகத்தின் பெயர் தி பெர்சியன்ஸ்.

இதை ஒரு பொலிட்டிக்கல் சைக்காலஜிக்கல் பிக்‌ஷன் எனலாம். காரணம், நாடகம் நடக்கும்போது பெர்சியா நிஜமாகவே ஏதென்ஸின் பரம்பரை எதிரி நாடாக உயிரோடு இருந்தது. ஏஸ்கிலஸ் செம தில்லுக்காரன். எதிரி நாட்டின் கதையை, தன் நாட்டு ரசிகர்களுக்கு முன்னால் லைவ் ஆகப் போட்டுக் காட்டுகிறான்.

கதை என்னவென்றால், ஒரு பேயின் பிரஸ் மீட் என ஒன்லைனில் கூறி விடலாம்!

இதே அந்த நாடகம் தொடங்குகிறது.

நாடகத்தின் ஓப்பனிங்கே அதிரடி. பெர்சியாவின் சூப்பர் ஸ்டார் மன்னன் டேரியஸ் இறந்துவிட்டான். இப்போது அவன் மகன் செர்க்ஸஸ் அரியணையில். அவனுக்கு நம்மதான் உலக மகா டான் என்கிற மிதப்பு. ஏதென்ஸ் மீது படை எடுத்துப் போகிறான். விளைவு? சலாமிஸ் கடற்போரில் செர்க்ஸஸின் படைகளை ஏதென்ஸ் துவம்சம் செய்கிறது. செர்க்ஸஸ் தன் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வருகிறான்.

பெர்சியத் தலைநகரில் இருக்கும் அவனது அம்மா ராணி அட்டாஸாவுக்கும், அமைச்சர்களுக்கும் பிபி எகிறுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல், மறைந்த மன்னன் டேரியஸின் கல்லறைக்கு முன்னால் கூடுகிறார்கள். அமானுஷ்ய மந்திரங்களை ஓதி, ஒரு ஸ்பிரிச்சுவல் ஹாட்லைன் மூலமாக டேரியஸின் ஆவியை நெட்வொர்க்கில் பிடிக்கிறார்கள்.

நம் ஊர் பேய் படங்கள் போல கரும்புகை, அகோரப் பற்கள், ரத்தக் கறை எல்லாம் இல்லாமல், டேரியஸின் ஆவி செம கிளாஸாக, மேடையில் அப்பியர் ஆனது.

இது அன்றைய மெக்கானிக்கல் ஸ்பெஷல் எபெக்ட்ஸ். மேடைக்கு அடியில் ஒரு ரகசியக் கதவு வைத்து, அதன் வழியே ஆவி நடிகரை மேலே தூக்கினார்கள் என்பதுதான் அந்த டிராமா டெக்னிக்.

ராணியும் அமைச்சர்களும் பயந்து நடுங்க, டேரியஸ்ஸின் ஆவி மைக்கைப் பிடித்தது (அப்போது மைக்கெல்லாம் இல்லை) அதாவது பேசத் தொடங்கியது.

"ஏன் இப்படி அலறுறீங்க? விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு அண்டர்வேர்ல்ட்ல அதாவது, பாதாள உலகத்துல ஓவர்டைம் டியூட்டி இருக்கு. சீக்கிரம் போகணும்!"  இதுதான் அந்த ஆவியின் கன்னிப் பேச்சு.

விசயத்தைச் சொன்னார்கள்.

விஷயத்தைக் கேட்டதும் டேரியஸ் ஆவிக்கு பயங்கரக் கோபம். தன் மகனின் முட்டாள்தனங்களை பாயிண்ட் பாயிண்ட்டாகப் பட்டியலிட்டது.

"நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த எம்பயரைக் கட்டினேன்? என் மகன் ஒரு இடியட். ஹெலஸ்பாண்ட் கடலில் பாலம் கட்டி இயற்கையையே கட்டுப்படுத்த நினைச்சான். அவன் வெறும் மனுஷன், ஆனா கடவுளுக்குச் சமமா ஆடப் பார்த்தான். இதுக்கு பேர்தான் அசாத்தியமான ஆணவம்!" என்று டேரியஸ் மேடையிலேயே செர்க்ஸஸை கிழித்துக் தொங்கவிட்டது.

சுருக்கமாகச் சொன்னால், அது ஒரு லைவ்-டெலிகாஸ்ட் ஃபேமிலி பஞ்சாயத்து. திட்டித் தீர்த்துவிட்டு ஆவி மீண்டும் அண்டர் கிரவுண்டுக்குள் எஸ்கேப் ஆனது.

இதை அப்போதுள்ள மக்கள் நம்பினார்களா என்றால் நம்பினார்கள்.

வெறும் தத்துவம் பேசினா எவனும் கேட்க மாட்டான். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், ஆணவம் தலைக்கேறினால் அழிவு நிச்சயம்ங்கிற மெசேஜை, ஒரு டெட் கிங் வந்து சொன்னாத்தான் மைண்ட்ல ஸ்ட்ராங்கா பதியும்னு பிளான் பண்ணான் அந்த மன்னன். அன்றைய த்ரில்லர் டெக்னிக் அது!

2400 வருடங்களுக்கு முன்பே, ஒரு கிரேக்க மேடையில் ஆவி தோன்றி, தன் குடும்பத்தை ரோஸ்டிங் செய்து, ஆணவத்தின் விளைவை விளக்கியது ஒரு மாஸ்டர்பீஸ் அமானுஷ்யம்!

இப்படி டேரியஸ் ஆவியை வைத்து ஏஸ்கிலஸ் ஒரு பிளே பண்ணியிருந்தாலும், டேரியஸ் ஆட்சிக்கு வந்த்தே ஆவியைக் கண்டுபிடித்ததன் மூலமாகத்தான். அது என்ன கதை என்கிறீர்களா? இது கதையல்ல. வரலாறு. அதற்குக் கொஞ்சம் நாளை வரை காத்திருங்கள்.

- அட்ரஸைத் தேடுவோம்.

*****

No comments:

Post a Comment