லவ் யுவர்செல்ப் – ஒரு யுரேகா மொமெண்ட்!
உங்களை
உங்களுக்குப் பிடிக்கிறதா?
என்ன
சார் கேள்வி இது, எனக்காகத்தானே நான் மூச்சு விடுறேன்? என்று கேட்கலாம்.
ஆனால்,
பலரது மூளை ஒரு விசித்திரமான அல்காரிதத்தில் ஓடுகிறது.
நான்
பத்து கிலோ எடை குறைத்த பிறகுதான் எனக்கு என்னைப் பிடிக்கும், பேங்க் பேலன்ஸ் ஆறு இலக்கத்தைத்
தொட்டால்தான் நான் சக்சஸ் என நினைப்பேன் என்று நிபந்தனைகள் போட்டுக்கொண்டே இருக்கிறோம்.
அவை நிறைவேறுவதன் அடிப்படையில்தான் என்னை எனக்குப் பிடிக்கும் என்கின்ற பிடிவாதத்தோடு
வாழ்கிறோம்.
உண்மை
என்னவென்றால், செல்ப் லவ் என்பது ஓர் இலக்கல்ல; அது ஒரு மென்பொருள் அப்டேட். இப்போதே,
இங்கே, இருக்கும் நிலையிலேயே உங்களை ஏற்றுக்கொள்வதுதான் அதன் சோர்ஸ் கோட்.
உங்களை
உங்களுக்குப் பிடிக்க என்ன செய்வது?
உங்கள்
நேரம், உங்கள் உழைப்பு, உங்கள் உணர்வுகள் என இவை எல்லாவற்றிற்கும் ஒரு மதிப்பு இருக்கிறது.
உங்களை மதிக்காத, உங்கள் எனர்ஜியை உறிஞ்சும் எமோஷனல் வேம்பயர்களைத் தள்ளி வையுங்கள்.
இந்த விசயத்தில் தூரம் என்பது சில சமயம் ஆரோக்கியமானது.
நோ என்று
சொல்வது ஒரு கலை. மற்றவர்களுக்கு உங்கள் தேவைகளைத் தெளிவாகச் சொல்வது தப்பில்லை. எல்லைக்
கோடுகளை வரைவது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம், ஆனால் உங்கள்
மன அமைதிக்கு அதுவே பாதுகாப்பு வேலி. லிமிட்டோடு இருப்பது அன்லிமிடெட் திருப்தியை வாரி
வழங்கும்.
உங்களைப்
பாராட்டி வந்த மெசேஜ்கள், மெயில்கள், கடிதங்கள் என இதையெல்லாம் ஒரு போல்டரில் போட்டு
வையுங்கள். எப்போதாவது நாம் எதற்கும் லாயக்கில்லை என்று தோன்றும் ரப்பிஷ் மொமென்ட்களில்
அதை எடுத்துப் படியுங்கள். நீங்கள் எவ்வளவு ஆஸம் என்பது உங்களுக்கே புரியும்.
ஒரு
நோட்டுப் புத்தகத்தை எடுங்கள். வாழ்க்கையில் நீங்கள் நன்றியோடு இருக்கும் மூன்று விஷயங்களை
எழுதுங்கள். அப்புறம் இன்னும் ஒரு மூன்று. இது ஒரு பழைய டெக்னிக்தான், ஆனால் மூளையின்
நெகட்டிவ் பயாஸை உடைக்க இதுவே சிறந்த சுத்தியல்.
நமக்கு
நாமே மிகப்பெரிய விமர்சகர். கண்ணாடி முன்னால் நின்று, ஏன் இப்படி இருக்கே? என்று கேட்பதற்குப்
பதில், ஒரு நல்ல நண்பனிடம் பேசுவது போலப் பேசுங்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தும்
சியர்லீடராக மாறுங்கள். நெகட்டிவ் சிந்தனைச் சுழலில் சிக்காதீர்கள்.
வாழ்க்கை
என்பது ஒரு பரிசு. இந்த டிரஸை ஒரு விசேஷத்துக்குப் போட்டுக்கலாம், இந்த ஸ்கெட்ச் புக்கை
அப்புறம் பயன்படுத்தலாம் என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள். அந்த டிரஸைப் போடுங்கள்,
ருசியான உணவை சமைத்துச் சாப்பிடுங்கள். இன்றுதான் மிகச்சிறந்த விசேஷம்!
சந்தோஷம்
என்பது ரொம்பவே வல்னரபிள். இவ்வளவு சந்தோஷமா இருக்கோமே, ஏதும் ஆகிடுமோ? என்கிற பயம்
வரும். அந்தப் பயத்தை விரட்ட கிராட்டிட்யூட் எனும் ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.
உங்களை
நேசிப்பது என்பது ஏதோ சுயநலம் என்று நினைக்காதீர்கள். அது ஒரு அடிப்படைத் தேவை. உங்களை
உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களால் மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்?
நாளை
முதல் நான் மாறப்போகிறேன் என்பது ஒரு சடங்கு. இன்று எனக்கு என்னைப் பிடித்திருக்கிறது
என்பது ஒரு சாதனை.
இன்று
மாலை கண்ணாடியைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகை செய்யுங்கள். பரவாயில்லை, நீ ஒரு நல்ல
ஆள்தான் என்று உங்களிடமே சொல்லிக்கொள்ளுங்கள். அந்த ஒரு நொடி உங்கள் மூளையின் டோபமைன்
அளவை எகிற வைக்கும். உங்கள் செல்ப் லவ் பயணம் அங்கிருந்து தொடங்கட்டும்!
லெட்ஸ்
ஸ்டார்ட் யுவர் யுரேகா மொமெண்ட்!
*****

No comments:
Post a Comment