Friday, 5 June 2026

குப்பை இல்லாக் கொண்டாட்டம்!

குப்பை இல்லாக் கொண்டாட்டம்!

நம் வீடுகள் இப்போது வெறும் வசிப்பிடங்கள் அல்ல, அவை ஒரு மினி மியூசியம். தேவையில்லாத பழைய துணிகள், ஓடாத வாட்ச்கள், எப்பவாவது உதவும் என்று சேர்த்து வைத்த பிளாஸ்டிக் டப்பாக்கள் என வீடு முழுக்க குப்பை.

வீட்டைச் சுத்தம் செய்வது என்பது வெறும் ஒட்டடை அடிப்பது மட்டுமல்ல, மனதைச் சுத்தப்படுத்துவதும் கூட என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

நம்மவர்கள் செய்யும் முதல் தப்பே, ஒரே நாளில் மொத்த வீட்டைச் சுத்தம் செய்யப் புறப்படுவதுதான். அதனால், இரண்டு மணி நேரத்தில் டயர்ட் ஆகி, பாதி வேலையில் டிசிஷன் பேட்டிக் வந்து அப்படியே விட்டுவிடுவார்கள்.

இந்த வாரம் முழுக்க வீட்டைச் சுத்தம் செய்வேன் என்று சொல்லாதீர்கள். இந்த சனிக்கிழமை இரண்டு மணி நேரம், இந்த ஒரு கப்போர்டை மட்டும் பார்ப்பேன் என்று இலக்கு வையுங்கள். சிம்பிள்!

சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் முன்பே, தேவையில்லாத பொருட்களை எங்கே போடப்போகிறோம் என்று முடிவு செய்யுங்கள்.

வாசலில் குப்பை மூட்டைகளை ஒரு வாரம் போட்டு வைத்தால், அதுவே ஒரு பெரிய மன அழுத்தமாகிவிடும். உடனே அப்புறப்படுத்துங்கள்.

தேவையற்ற பொருட்களைத் தயக்கமில்லாமல் தூக்கி எறிய உங்களுக்கு இந்த மூன்று ரூல்ஸ் போதும்.

1) ஒரு பொருள் உடைந்துவிட்டது, அதை ஒரு வருஷமாக நீங்கள் சரி செய்யவில்லை என்றால், இனிமேல் அதைச் செய்யப்போவதில்லை. தூக்குங்கள்!

2) எப்போதாவது உதவும் என்று எதையும் வைக்காதீர்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்றே உங்களுக்குத் தெரியாது! எனவே அப்படி எதையாவது வாங்கி வைத்திருந்தால் அதையும் கட்டம் கட்டித் தூக்குங்கள்.

3) யாரோ உங்களிடம் கொடுத்துச் சென்ற பொருள் ஒரு வருடமாக அங்கேயே இருக்கிறதா? திருப்பித் தந்துவிடுங்கள், அல்லது டிஸ்போஸ் செய்யுங்கள்.

அலமாரிக்கு மேலே, பரண் மேல் இருக்கும் பொருட்களை ஒருமுறை செக் பண்ணுங்கள். பல வருடங்களாகப் பார்க்காத அந்தப் பொருட்கள் உங்களுக்குத் தேவையில்லை என்பதே உண்மை.

இது எங்க பெரியம்மா கொடுத்த பெயிண்டிங் என்று பிடிக்காத ஒன்றைப் பாதுகாப்பது தேவையற்றது. பெரியம்மா ஒன்றும் கோபித்துக்கொள்ளப் போவதில்லை. அதற்கு பை பை சொல்லுங்கள்.

பொதுவாக உங்களுக்கு மிகவும் தேவையான அவசியமான முக்கியமான பொருள் என்றால், வீட்டில் தீப்பிடித்தால் எதைத் தூக்கிக்கொண்டு ஓடுவீர்களோ அதுதான். அதுதான் முக்கியம். மற்றதெல்லாம் வெறும் பொருட்கள்தான். ஒரு மெமரி பாக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள், அதில் மிக முக்கியமானவற்றை மட்டும் சேமியுங்கள்.

ஒரு சட்டையைப் போட்டால் உங்களுக்குத் தன்னம்பிக்கை வரவில்லை என்றால், அதை ஏன் வைத்திருக்கிறீர்கள்? பழைய துணிகள் மீண்டும் பேஷன் ஆகும் என்று காத்திருப்பது வீண். உங்களுக்குப் பிடிக்காத துணிகளைத் தானம் செய்யுங்கள்.

அப்புறம், இதையெல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கான ஒரு சிறு வழிகாட்டி இதோ.

பழைய போன்களை விற்பதற்கென்றே இணையதளங்கள் இருக்கின்றன. அங்கே கொடுத்தால் காசு கிடைக்கும். உங்கள் மேஜைக்கும் ஒரு ப்ரினெஸ் கிடைக்கும்.

தேவையில்லை என்று நினைக்கும் பழைய சோபா, பீரோக்களைத் தொண்டு நிறுவனங்களுக்குத் தரலாம்.

பழைய புத்தகங்களை அமேசானில் விற்கலாம் அல்லது மற்றவர்களுடன் பகிரலாம்.

பொருட்களைச் சேர்ப்பது ஒரு நோய். அவற்றை விடுவிப்பது ஒரு விடுதலை. அதிலும் தேவையில்லாத பொருட்களுக்கு டாடா சொல்வது மன ஆரோக்கியம்.

இன்று மாலை உங்கள் சூட்கேஸ்களைத் திறந்து பாருங்கள். உள்ளே பழைய ஜிப் போன பேக்குகள் இருந்தால் தயக்கமின்றித் தூக்கி எறியுங்கள். உங்கள் வீட்டின் வென்டிலேஷன் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது!

*****

No comments:

Post a Comment