நீலப் பிசாசும் நிம்மதி விரதமும்!
எல்லாருடைய
வரவேற்பறையும் இப்போது ஒரு விசித்திரமான நீல நிற ஒளியில் மூழ்கியிருக்கிறது. இது ஏதோ
ஆர்டிஸ்டிக் லைட்டிங் என்று நினைக்காதீர்கள். கணவர் போனில் கிரிக்கெட் ஸ்கோர் பார்க்கிறார்,
மனைவி யூடியூப்பில் புதுப்புது ரெசிப்பிகள் பார்க்கிறார், மகள் ஐபேடில் இன்ஸ்டா ரீல்ஸ்
பார்க்கிறாள், மகன் லேப்டாப்பில் ஹோம்வொர்க் செய்துகொண்டே பார்ட்டிக்கு மெசேஜ் அனுப்புகிறான். இன்னும் வீட்டில் யாரும் இருந்தால், முகமே தெரியாத
பேஸ்புக் நண்பர்களின் போஸ்ட்களைப் பார்த்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மை
என்னவென்றால், நமக்கு உதவ வேண்டிய தொழில்நுட்பம், இப்போது நம்மை அடிமையாக்கத் தொடங்கிவிட்டது.
நாம்
செல்போனுக்கு மட்டும் அடிமையாகவில்லை, அதைச் சுற்றி மிக மோசமான பழக்கங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.
நீங்கள்
ஒரு நாளைக்குச் சராசரியாக 33 முறை போனைச் செக் செய்தால், வருடத்தில் 30 நாட்கள் போன்
திரையிலேயே முடியும். இதற்குப் பின்னால் ஒரு சைக்காலஜி இருக்கிறது. ஒரு நோட்டிபிகேஷன்
வரும்போது மூளையில் டோபமைன் சுரக்கிறது. யாராவது லைக் போட்டிருப்பார்களோ? என்கிற அந்த
எதிர்பார்ப்பு ஒரு போதை.
விளைவு?
குழந்தைக்குக்
கதை சொல்லும்போது கூட வாட்ஸ்அப் பிங் சத்தத்தைத் தவிர்க்க முடிவதில்லை. இதற்குப் பெயர்தான்
டிஸ்பங்க்சனல் ரிலேஷன்ஷிப்.
இதிலிருந்து
தப்பிக்க பல வழிகள் இருக்கின்றன. சில வழிகள் இதோ,
முதல்
வழி வெளியே கிளம்புங்கள். ஜிம்முக்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. ஒரு சாதாரண நடைப்பயிற்சி
உங்கள் மனதைச் சாந்தப்படுத்தும்.
இரண்டாவது
வழி சமையல் செய்யுங்கள். இன்ஸ்டன்ட் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மெனக்கெட்டு ஒரு உணவைச்
சமைத்துப் பாருங்கள். அந்தப் போகஸ் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸைக் காலி செய்யும்.
மூன்றாவது
வழி மியூசியம் அல்லது கேலரிக்குச் செல்லுங்கள். அமைதியான சூழலில் கலைப் பொருட்களைப்
பார்ப்பது ஆன்மாவுக்கு ஒரு டானிக்.
நான்காவது
வழி புத்தகங்களின் வாசனையை அனுபவியுங்கள். குழந்தைகளுக்குப் புது உலகத்தைக் காட்ட இதுவே
சிறந்த இடம்.
ஐந்தாவது
வழி பல்லாங்குழியோ அல்லது தாயம் போன்ற போர்டு கேம்ஸ்களோ விளையாடுங்கள். அந்த விளையாட்டுகள்
உறவுகளை பலப்படுத்தும்.
ஆறாவது
வழி ஒரு லாங் டிரைவ். மேப் பார்க்காமல், இலக்கு இல்லாமல் செல்லுங்கள். பிடித்த பாடல்களை
அலற விடுங்கள்.
ஏழாவது
வழி பழைய அலமாரியைச் சுத்தம் செய்வது ஒரு சிறந்த தெரபி. தேவையற்றதை அப்புறப்படுத்தும்
போது மனசும் லேசாகும்.
எட்டாவது
வழி எதையுமே செய்யாமல் ஓர் இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது இப்போது இது ஒரு மிக
அரிதான கலை. அதைமுயற்சித்துப் பாருங்கள்.
ஒன்பதாவது
வழி ஒரு மொழி அல்லது ஒரு கைவினைப் பொருளைச் செய்வது பற்றிக் கற்க ஆரம்பியுங்கள். மூளைக்குத்
தரும் ஒரு சவாலாக இது இருக்கட்டும்.
பத்தாவது
வழி குழந்தைகளுடன் சேர்ந்து படம் வரையுங்கள், வண்ணம் தீட்டுங்கள். இது ஒரு சிறந்த மைண்ட்புல்
ஆக்டிவிட்டி.
இதற்கு
மேலும் வழிகள், நீங்கள் யோசிக்க யோசிக்க கிடைக்கும்.
வாழ்க்கை
என்பது ஒரு முடிவில்லாத ஸ்க்ரோலிங் கிடையாது. நோட்டிபிகேஷன்களை ஆப் செய்யுங்கள். நீங்கள்
மெசேஜுக்குப் பதில் சொல்லாவிட்டால் உலகம் ஒன்றும் அழிந்துவிடாது.
தொழில்நுட்பம்
ஒரு கருவி மட்டுமே; அது எஜமானன் ஆகிவிடக் கூடாது.
இன்று
இரவு படுக்கும்போது போனை உங்கள் படுக்கையறைக்கு வெளியே வைத்துவிட்டுத் தூங்குங்கள்.
காலை எழுந்ததும் முதல் ஐந்து நிமிடம் ஜன்னல் வழியே வானத்தைப் பாருங்கள், போன் திரையை
அல்ல. உங்கள் டிஜிட்டல் விடுதலை அங்கிருந்து தொடங்கட்டும்!
*****

No comments:
Post a Comment