Sunday, 7 June 2026

உறவுகள் 2.0 – நவீன காலத்துக்குத் தேவையான ஓர் அப்டேட்!

உறவுகள் 2.0 – நவீன காலத்துக்குத் தேவையான ஓர் அப்டேட்!

உங்கள் பார்ட்னர், குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் ஆகிய இவர்களோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

ஹார்டு டிஸ்க் கிராஷ் ஆனது போல எப்போது பார்த்தாலும் சண்டையா?

அல்லது,

ஸ்மூத் ஆக ஓடிக்கொண்டிருக்கிறதா?

உளவியல் நிபுணர்கள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். சமூகத் தொடர்பு இல்லாமல் மன அழுத்தத்துடன் தனிமையில் இருப்பது, ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதற்குச் சமம்!

ஆம்,

மன அழுத்தத்துடன் கூடிய தனிமை என்பது ஒரு ஸ்லோ பாய்சன். ஆரோக்கியமான உறவுகள் உங்கள் ஆயுளைக் கூட்டும் ஆன்டி பயாடிக்.

அந்த டாக்சிக் தனிமையைத் தவிர்க்க, உறவுகளில் இருக்கும் பக்குகளை  உங்களை வெர்ஷன் 2.0 ஆக அப்டேட் செய்ய, இதோ வழிகள்.

யாராவது உங்களிடம் பேசும்போது, ம்... ஊம்... என்று போனை நோண்டிக்கொண்டு தலையாட்டுவது லிசனிங் அல்ல. அது வெறும் நாய்ஸ் கேன்சலேஷன்.

பேசப்படுபவரின் கண்களைப் பாருங்கள், ஆனால் முறைக்காதீர்கள்!. குறுக்கே பேசாதீர்கள். உனக்கு என்ன, எனக்கு நடந்ததக் கேளு, என்று உங்கள் கதையை ஆரம்பிக்காதீர்கள்.

அவர் பேசி முடித்ததும், ஓ அப்போ இன்னைக்கு ஆபீஸ்ல உனக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு வருத்தப்படுறியா? என்று அவர் சொன்னதைச் சுருக்கிச் சொல்லுங்கள். இதுதான் ஆக்டிவ் லிசனிங். அப்போதுதான் அவருக்கு, நாம சொல்றதக் கேக்குறதுக்கு ஒரு ஆள் இருக்காங்க என்கிற திருப்தி வரும்.

உறவுகள் குறித்த ஆராய்ச்சி நிபுணர்கள் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி சமாச்சாரத்தைச் சொல்கிறார்கள். ஓர் ஆரோக்கியமான உறவில், ஒரு நெகட்டிவ் விஷயத்திற்கு  ஈடாக ஐந்து பாசிட்டிவ் விஷயங்கள் இருக்க வேண்டுமாம்.

அதாவது, நெகட்டிவிட்டி என்பது உப்பு போல, கொஞ்சம் இருக்கலாம். ஆனால் பாசிட்டிவிட்டிதான் மெயின் டிஷ். உங்கள் பார்ட்னரைத் தட்டிக்கொடுப்பது, ஒரு சின்ன புன்னகை, அந்த வொர்க் சூப்பர் எனப் பாராட்டுவது, யூ ஆர் ஸோ க்யூட் என்று சொல்வது, அமேசிங் என வியப்பை வெளிப்படுத்துவது என  இதெல்லாம் அந்த 5 பாயிண்ட்டில் சேரும்.

ஒரே கூரையின் கீழ் இருந்தாலும், ஆளுக்கொரு பக்கமாக மொபைலில் மூழ்கியிருந்தால் நீங்கள் ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்தான்.

ஒன்றாகச் சேர்ந்து சமையல் செய்வது, ஒரு சின்ன நடைப்பயிற்சி போவது என ஷேர்டு எக்ஸ்பீரியன்ஸ், ஒன்றாக அமர்ந்து படித்து விவாதிப்பது, பிரச்சனைகளைக் கூடிப் பேசி அலசுவது என சூழ்நிலைகளை உருவாக்குங்கள். கஷ்டமான காலங்களில் இந்த நினைவுகள்தான் குஷின் போல உங்களுக்கு உதவும்.

கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது உறவுகளைப் பலப்படுத்தும் ஒரு பாலம். உங்களுக்குப் பிடித்தவர்களை ஓவியமாக வரைந்து கொடுங்கள். அது கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அது அவர்களைக் கவரும். உங்கள் அன்பானவர்களின் சின்ன சின்ன விசயங்களைப் பாராட்டிக் கவிதை எழுதிக் கொடுங்கள். உங்களுக்குத் தையல் தெரியும் என்றால், ஓர் ஆடையைக் கலைநயத்தோடு உருவாக்கிக் கொடுக்கலாம். பின்னல் வேலை தெரியும் என்றால் அதை வைத்தே உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அருமையாகக் குல்லா போடலாம். இப்படி கலை மூலமாகவும் உறவுகளை வளர்க்கலாம், மனநிலையையும் மேம்படுத்தலாம்.

இந்தக் கலையையே ஒருவராக அல்லாமல் இருவராக, இன்னும் சிலராக சேர்ந்து செய்யும் போது அது வாழ்க்கைக்கு எனர்ஜி டானிக்தான்.

எல்லாருடனும் சேர்ந்து புது விஷயங்களைச் செய்யும்போது மூளையின் வேறுவேறு பகுதிகள் வேலை செய்யும். அது உங்கள் மன அழுத்தத்தை அற்புதமாகக் குறைக்கும்.

உங்கள் துணையுடன் சேர்ந்து ஒரு ஸ்கிராப் புக் செய்யுங்கள். பழைய போட்டோக்கள், டிக்கெட் துண்டுகளை ஒட்டி வையுங்கள். அது ஒரு மெமரி லேன் பயணம்.

வாழ்க்கை என்பது ஒரு முடிவில்லாத ஆட்டோ பைலட் பயணம் கிடையாது என்பதை நாம் முன்பே பார்த்துள்ளோம்.

உறவுகள் என்பது ஒரு செடி போல. அதற்குத் தினமும் அட்டென்ஷன் என்கிற தண்ணீர் ஊற்ற வேண்டும்.

எல்லாரும் இருக்காங்க சார், ஆனா யாரும் என்னைப் புரிஞ்சுக்கல, என்று புலம்புவதற்குப் பதில், நீங்கள் யாரையாவது புரிந்துகொள்ள முயற்சி செய்தீர்களா என்று பாருங்கள்.

இன்று இரவு உங்கள் பார்ட்னரிடமோ அல்லது குழந்தையிடமோ போனைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரு பத்து நிமிடம் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். ஆக்டிவ் லிசனிங் ஒரு மேஜிக் செய்யும். ஆம், உங்கள் உறவின் ஆயுள் சந்தா இன்று புதுப்பிக்கப்படும்!

*****

No comments:

Post a Comment