Monday, 8 June 2026

ஹார்ட் டூ ஹார்ட் – இணைவோம்! இனிப்போம்!!

ஹார்ட் டூ ஹார்ட் – இணைவோம்! இனிப்போம்!!

மைண்ட்புல்னஸ் என்றால் ஏதோ நீங்கள் மட்டும் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு இன்னர் பீஸ் தேடுவது என்று நினைக்காதீர்கள். அது உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்குமான ஒரு ஷேர்டு சாப்ட்வேர். குறிப்பாக ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இது மிக முக்கியம்.

உங்கள் வீடு ஒரு ஹேப்பி பிளேஸ் ஆக இருக்க வேண்டும் என்றால், உங்கள் எமோஷனல் தேவைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் லட்சியங்களுக்கு நீங்கள் தோள் கொடுக்க வேண்டும்.

அதற்கான வழிமுறைகள் என்ன என்கிறீர்களா? இதோ அவை.

வாழ்க்கை போர் அடிப்பதற்குக் காரணமே அதன் ரிப்பீட்டட் மோட் தான். ஒன்றாகச் சேர்ந்து சமைப்பது, ஒரு சைக்கிள் ரேஸ் போவது அல்லது வாரா வாரம் ஒரு டேட் நைட் என எதையாவது புதிதாகச் செய்யுங்கள். இது குடும்ப உறுப்பினர்களோடு உங்கள் பாண்டிங்கை ஸ்ட்ராங் ஆக்கும்.

எப்போதும் ஒட்டியே இருக்க வேண்டும் என்பதில்லை. எனக்கு ஒரு மணி நேரம் தனியா இருக்கணும், என்று சொல்வது தப்பில்லை. உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கிக் கொண்டால்தான், உங்கள் பார்ட்னருக்குத் தர உங்களிடம் எனர்ஜி மிச்சமிருக்கும். அவர் எவ்வளவு ஸ்பேஸ் எதிர்பார்க்கிறார் என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அவங்கதானே, எங்க போகப் போறாங்க? என்கிற அசட்டுத் துணிச்சல்  வேண்டாம். அவ்வப்போது சின்னச் சின்ன சர்ப்ரைஸ் கொடுங்கள். இன்னைக்கு உன்னோட டிரெஸ் ஸ்டைல் சூப்பர், என்று ஒரு சின்ன காம்ப்ளிமென்ட் கொடுப்பதில் ஜிஎஸ்டி எதுவும் கிடையாது!

மனதில் எதையும் பூட்டி வைக்காதீர்கள். ஒளிவுமறைவு இல்லாத பேச்சு கசப்பான உணர்வுகளைக் குறைக்கும். முக்கியமாக, அவர்கள் சொல்லும் போது சட்டென்று ரியாக்ட் செய்யாமல், கொஞ்சம் நிதானித்து ரெஸ்பான்ட் செய்யுங்கள்.

உறவு நன்றாகப் போகிறதா? எதற்கெல்லாம் நீங்கள் நன்றியோடு இருக்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் போடுங்கள். ஆனால், அங்கே மரியாதையே இல்லை, லட்சியங்கள் வேறுபடுகிறது என்றால், அந்த உறவிலிருந்து கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு விலகி இருப்பதுதான் புத்திசாலித்தனம்.

சின்னச் சின்ன சண்டைகள் ஆரோக்கியமானதுதான். ஆனால், ஒரே விஷயம் லூப் போலத் திரும்பத் திரும்ப வந்து சண்டையாக மாறினால், அது பெர்சனல் அட்டாக் ஆக மாறினால், அது ஓர் ஆபத்து அறிகுறி.

அப்போது ஒரு புரொபஷனல் கவுன்சிலரைக் கூட அணுகுவதில் தப்பில்லை. அவர்கள் ஒரு சேப் ஸ்பேஸ் உருவாக்கித் தருவார்கள். அங்கே சண்டை வராமல், பிரச்சனையின் வேர் எது என்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் ஒரு மிரர் போல உங்களுக்கு உதவுவார்கள்.

உறவுகள் என்பது எப்போதும் ஒரு சிக்கலான அல்காரிதம். அங்கே ஈகோ நுழையும்போது அவுட்புட் எர்ரர் காட்டும். அந்த எர்ரரைச் சரி செய்ய மைண்ட்புல்னஸ் என்கிற மெக்கானிக் தேவை.

இன்று மாலை உங்கள் பார்ட்னரிடம் உறவினரிடம் போய், உங்களுக்கு நான் என்ன செய்யணும்னு? என்று ஒரு நிமிடம் கேளுங்கள். அந்த ஒரு நிமிடம் உங்கள் இருவருக்கும் இடையிலான பெரிய சுவரை உடைக்கலாம். உங்கள் மைண்ட்புல் ஹோம் மற்றும் ரிலேஷன்ஸ் அங்கிருந்து தொடங்கட்டும்!

*****

No comments:

Post a Comment