Sunday 9 October 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 10.10.2022 (திங்கள்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

10.10.2022 (திங்கள்)

தமிழ் செய்திகள்

இரண்டாவது முறையாகத் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் மு.க. ஸ்டாலின்.

முதல் பருவ விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன.

நான்காவது தொழிற்புரட்சிக்கு தலைமையேற்று வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மின்னணு பண முறை (டிஜிட்டல் கரன்சி) இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் எண்ணெய் ஏற்றுமதி இறக்குமதி கொள்கையில் எந்த நாடும் தலையிட அனுமதிக்க முடியாது என பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

சென்னை உட்பட 8 நகரங்களில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கென புதிய சிம் மாற்றத் தேவையில்லை எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் 4 நகரங்களில் 5ஜி  சேவைய அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. 2023 ஆகஸ்ட் 15 முதல் தனது 5ஜி சேவையைத் துவங்க உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலவில் அதிக அளவு சோடியம் இருப்பதை இந்தியத அனுப்பிய சந்திராயன் – 2 விண்கலம் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

தென் வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News

M.K. Stalin is elected D.M.K.’s president for the second term.

Schools are opening today in Tamil Nadu after the end of the first term vacation.

Prime Minister Narendra Modi has said that India has the ability to lead the Fourth Industrial Revolution.

The Reserve Bank of India has said that digital currency will improve the Indian economy.

Petroleum Minister Hardeep Singh Puri has said that no country can be allowed to interfere in India's oil export and import policy.

Airtel has announced that it is providing 5G service in 8 cities including Chennai. The company has also announced that there is no need to change a new SIM for this. Jio has announced that it is offering 5G services in 4 cities. BSNL has said to start its 5G service from August 15, 2023.

India's Chandrayaan-2 spacecraft has captured images of high sodium content on the moon.

The Chennai Meteorological Department has said that there is a possibility of heavy rain in Nilgiris, Thanjavur, Thiruvarur, Nagapattinam and other districts due to the atmospheric circulation prevailing in the South Bay of Bengal region.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment