பொதுக்காரணிகள் - பாடக்குறிப்பு
வகுப்பு
& பாடம் |
VI - கணக்கு |
அலகு |
1 |
இயல் |
எண்கள் |
பாடத்தலைப்புகள் |
1.5. பொதுக்காரணிகள் |
கற்கும்
முறை |
Active Learning Methodology (ALM) |
கற்றல் விளைவுகள் :
603. குறிப்பிட்ட சூழலில் மீ.பொ.வ. அல்லது மீ.சி.ம. பயன்படுத்துதல்.
1. அறிமுகம் :
ஆர்மூட்டல் |
நினைவு கூர்தல் |
மேலாய்வு |
நான்காம் வாய்பாட்டிலும், ஐந்தாம் வாய்பாட்டிலும்
பொதுவாக வரும் பெருக்கல்பலன்களைக் கூற செய்தல். |
காரணிகள், காரணிப்படுத்துதல்
குறித்த கருத்துகள். |
பக்கம் 13 முதல்
26 வரை |
2. புரிதல் :
அ) கருத்துச்
செயல்பாடு :
40, 56 இன் மீ.பெ.கா காணுதல்.
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1) 18, 30 இன் மீ.பெ.கா.
மற்றும் மீ.சி.ம.வின் விகிதத்தைக் காண்க. 2) 51, 85 இன் மீ.பெ.கா.
காண்க. |
1) 18, 24 இன் மீ.பெ.கா. காண்க. 2) 84, 120 இன் மீ.சி.ம. காண்க. |
3. குழுவேலை :
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
ஒரு வீட்டில் நான்கு தொலைபேசிகள்
உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின் முதல் அலைபேசி
ஒவ்வொரு 15 நிமிடத்திலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 20 நிமிடத்திலும், மூன்றாவது
அலைபேசி ஒவ்வொரு 25 நிமிடத்திலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடத்திலும் ஒலித்தால்
அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்? |
1) 6,9 2) 8, 12 3) 10, 15 ஆகியவற்றின் மீ.சி.ம.வை
வகுத்தல் முறை, பகாக்காரணிப்படுத்தும் முறைகளில் காண்க. |
4. வலுவூட்டுதல் :
பக்கம் 24 இல் உள்ள கொள்குறி
வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு |
வளரறி மதிப்பீடு |
1) 18, 24 இன் மீ.பெ.கா. காண்க. 2) 30, 40, 60 இன் மீ.சி.ம. காண்க. 3) 154, 198, 286 ஆகிய எண்களின்
மீ.பெ.கா. மற்றும் மீ.சி.ம. கண்டறிக. 4) முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள
80 லி., 100 லி., 120 லி. கலன்களில் பாலினைச் சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின்
அதிகபட்ச கொள்ளளவைக் கண்டறிக. 5) இரு எண்களின் மீ.சி.ம. ஆனது
மீ.பெ.கா.வின் 6 மடங்காகும். மீ.பெ.கா. 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றோர் எண்ணைக்
காண்க. |
1 முதல் 1000 வரையுள்ள பகா எண்களின்
பட்டியலைத் தயாரித்து வருக. |
6. குறைதீர்க் கற்றல் :
பக்கம் 22 இல் உள்ள இணையச் செயல்பாடு.
7. தொடர்பணி :
பயிற்சி 1.2. இல் 7 மற்றும் 8.
*****
No comments:
Post a Comment