Tuesday, 18 October 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 19.10.2022 (புதன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

19.10.2022 (புதன்)

தமிழ்ச் செய்திகள்

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நன்னெறிக் கல்வி அவசியம் என உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் தமிழக சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது.

தமிழக சட்டப் பேரவையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில் தமிழ் வழிக் மருத்துவக் கல்வி ஏற்படுத்தப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருவதால் கரையோர கிராமங்களைச் சேர்ந்த வீடுகளில் ஆற்று நீர் புகுந்தது.

கன்னியாகுமரி, தேனி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் வைகை அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பொருளாதார நடவடிக்கைகளில் நேர்ந்த தவறுகளுக்காக மன்னிப்பு கோரினார் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ்.

இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய புக்கர் பரிசினை இந்த ஆண்டு இலங்கை எழுத்தாளர் செகான் கருணாதிலக வென்றார்.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

The Madurai branch of the High Court has opined that moral education is necessary to guide the students.

The inquiry report of the Arumugasamy Commission into the death of former Chief Minister Jayalalithaa was released in the Tamil Nadu Legislative Assembly.

The Aruna Jagatheesan Commission report on the Thoothukudi firing was also released in the Tamil Nadu Legislative Assembly.

A resolution was passed in the Tamil Nadu Legislative Assembly against imposition of Hindi.

Deputy Governor Tamilisai Soundrarajan has said that Tamil-medium medical education will be established in Puducherry.

As the Chief Justice of the Supreme Court, D.Y. Chandrachud has been appointed.

The amount of water being released from the Kollidam river has been increasing and the river water has entered the houses of the coastal villages.

Chennai Meteorological Center has informed that there is a possibility of heavy rain in 7 districts including Kanyakumari, Theni and Tenkasi.

Due to heavy rains in Theni district, the amount of water released from Vaigai Dam has also increased.

British Prime Minister Liz Truss apologizes for mistakes in UK economic activity.

This year Sri Lankan writer Sekhan Karunathilaka won the prestigious Booker Prize for literature.

***For School Prayer***

No comments:

Post a Comment