Monday, 17 October 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 18.10.2022 (செவ்வாய்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

18.10.2022 (செவ்வாய்)

தமிழ்ச் செய்திகள்

உலக அளவிலான வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழையின் அறிகுறியாக வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தாழ்வு மையம் 21 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 22 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்சி அருகே குளித்தலை சாலையில் அல்லூர் கோயிலில் சோழர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உகாண்டாவில் பரவும் எபோலா வைரஸ் காரணமாக அந்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் தாக்கத்தால் ரூபாயின் மதிப்பும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

***பள்ளி காலை வழிபாடு கூட்டச் செய்திகளுக்காக****

English News

Prime Minister Narendra Modi has expressed hope that India will become a global manufacturing hub for agricultural products.

A low pressure area has formed over the Bay of Bengal as a sign of the northeast monsoon, the Chennai Meteorological Department said. The Chennai Meteorological Department has also said that the depression center is likely to turn into a storm on the 21st. Due to this, heavy rain is likely to occur in 22 districts, according to the Chennai Meteorological Department.

Inscriptions of the Chola period have been found at the Allur temple on the Kulithlai road near Trichy.

A curfew has been announced in Uganda due to the Ebola virus spreading in the country.

The price of gold continues to decline as the dollar continues to appreciate. It is significant that the value of the rupee is decreasing due to this impact.

***For School Prayer***

No comments:

Post a Comment