Monday 10 October 2022

8வது தமிழ் - திருக்கேதாரம் & பாடறிந்து ஒழுகல் - பாடக்குறிப்பு

திருக்கேதாரம் & பாடறிந்து ஒழுகல் - பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VIII - தமிழ்

இயல்

5

பொருண்மை

கலை, அழகியல், பண்பாடு

இயல் பகுப்பு

கவிதைப்பேழை

பாடத்தலைப்புகள்

1. திருக்கேதாரம்

2. பாடறிந்து ஒழுகல்

கற்றல் விளைவுகள்

813. தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், தேசப்படங்கள், கலைக்களஞ்சியம் போன்றவற்றையும் இணையதளத்தையும் பொருத்தமான முறையில் பயன்படுத்துதல்.

815. தாம் அறிந்திராத சூழல்களைப் பற்றிக் கற்பனை செய்தும் நிகழ்வுகள் பற்றி மனத்தில் உருவகித்தும்; அவற்றைப் பற்றிச் சிந்தித்தும் எழுத்து வழி வெளிப்படுத்தல்.

1. அறிமுகம் :

பக்கம் 94 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

2. புரிதல் :

அ) படித்தல் :

ஆசிரியர் திருத்தமான உச்சரிப்போடு படிக்க மாணவர்கள் பின்தொடர்தல். அதைத் தொடர்ந்து மாணவர்கள் படித்துப் புதிய சொற்களை அடிக்கோடிடுதல்.

ஆ) மனவரைபடம்


3. ஒருங்கமைத்தல் :

‘திருக்கேதாரம்’ குறித்த தொகுப்பு :

பாடலின் திரண்ட கருத்து

தமிழ்ப் பண்ணுக்கு

புல்லாங்குழலும் முழவும்

கண்களுக்கு

பொன் வண்ண நீர் நிலைகள்

மத யானைகளுக்கு

வீசி எறியும் மணிகள்

காதுகளுக்கு

கிண் எனும் இசை

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் பெயர்

சுந்தரர்

சிறப்புப் பெயர்கள்

நம்பியாரூரர், தம்பிரான் தோழர்

இயற்றிய நூல்கள்

தேவாரம் – ஏழாம் திருமுறை

‘பாடறிந்து ஒழுகல்’ குறித்த தொகுப்பு :

பாடலின் திரண்ட கருத்து

ஆற்றுதல் என்பது

வறியோர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது

அன்புடையோரைப் பிரியாமை

பண்பு என்பது

நல்வழியில் ஒழுகுதல்

அன்பு என்பது

வெறுப்பின்றி வாழ்தல்

அறிவு என்பது

அறிவற்றவர் சொல் பொறுத்தல்

செறிவு என்பது

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல்

நிறை என்பது

மறைத்தன்மையைக் காத்தல்

முறை என்பது

நடுவுநிலை தவறாமை

பொறை என்பது

இகழ்பவரைப் பொறுத்தல்

ஆசிரியர் குறிப்பு

ஆசிரியர் பெயர்

நல்லந்துவனார்

சிறப்பு

கலித்தொகையைத் தொகுத்தவர்

இயற்றிய நூல்கள்

கலித்தொகையின் நெய்தல் கலி

4. வலுவூட்டுதல் :

அ) கலந்துரையாடுதல்  :

1.      திருக்கேதாரத்தின் சிறப்பு குறித்துக் கலந்துரையாடுதல்.

2.      நல்லந்துவனார் குறிப்பிடும் பண்பு நலன்கள் குறித்துக் கலந்துரையாடுதல்.

ஆ) வழங்குதல் :

1.      பாடலின் திரண்ட கருத்தை மாணவர்கள் குழுவாக அல்லது தனியாக வழங்குதல்.

2.      பாடலைத் தனியாக அல்லது குழுவாகப் பாடிக் காட்டுதல்.

3.      சுந்தரர் மற்றும் நல்லந்துவனார் பற்றிய குறிப்புகளைத் தொகுத்து வழங்குதல்.

5. மதிப்பீடு :

அ) வகுப்பறை மதிப்பீடு

1.      கனகச்சுனை – பிரித்து எழுதுக.

2.      முழவு + அதிர – சேர்த்து எழுதுக.

3.      மறைபொருளைக் காத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

4.      பாடறிந்து – பிரித்து எழுதுக.

5.      திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனை செய்கிறார்?

6.      பண்பு, அன்பு குறித்துக் கலித்தொகை கூறுவன யாவை?

7.      முறை, பொறை குறித்துக் கலித்தொகை கூறுவன யாவை?

8.      நல்லந்துவனார் குறிப்பிடும் பண்பு நலன்களைத் தொகுத்து எழுதுக.

ஆ) வளரறி மதிப்பீடு

1.      பாடலை நயமுடன் பாடிக் காட்டுதல்.

2.      சுந்தரரின் உருவத்தை ஓவியமாகத் தீட்டி வருதல்.

3.      நற்பண்புகளை விளக்கும் கதைகளைத் தொகுத்து வருதல்.

6. எழுதுதல் :

பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு தமிழ் குறிப்பேட்டில் விடை எழுதி வருதல்.

7. குறைதீர் கற்றல் :

1.      குழுவாகப் பாடலைப் பாடுதல்.

2.      பாடலின் திரண்ட கருத்தைக் குழுவாக விவாதித்து வழங்குதல்.

3.      மனவரைபடத்தின் மூலமாக மீளக் கற்றல்.

*****

No comments:

Post a Comment