Friday, 14 October 2022

8 வது தமிழ் - நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் – பாடக்குறிப்பு

8 வது தமிழ் - நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் – பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VIII - தமிழ்

இயல்

5

பொருண்மை

கலை, அழகியல், பண்பாடு

இயல் பகுப்பு

உரைநடை உலகம்

பாடத்தலைப்பு

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

கற்றல் விளைவுகள்

820. கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கட்டடக்கலை, உழவுத்தொழில், விதை விதைத்தல், நாட்டியம் மெய்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்.

1. அறிமுகம் :

பக்கம் 98 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.

2. புரிதல் :

அ) படித்தல் :

ஆசிரியர் திருத்தமான உச்சரிப்போடு படிக்க மாணவர்கள் பின்தொடர்தல். அதைத் தொடர்ந்து மாணவர்கள் படித்துப் புதிய சொற்களை அடிக்கோடிடுதல்.

ஆ) மனவரைபடம்

3. ஒருங்கமைத்தல் :

பின்வரும் தலைப்புகளில் பாடக் கருத்துகளைத் தொகுத்தல் :


1.      மட்பாண்டக் கலை

2.      பாய் முடையும் கலை

3.      பனையோலைக் கலை

4.      மூங்கில் கலை


5.      பிரம்புக் கலை

6.      கைவினைக் கலைகளைக் காத்தல்.


4. வலுவூட்டுதல் :

அ) கலந்துரையாடுதல்  :

பாடத்தின் திரண்ட கருத்தைக் கலந்துரையாடல் செய்தல்.

ஆ) வழங்குதல் :

தொகுத்தலைத் தனியாகவோ, குழுவாகவோ வழங்குதல்.

5. மதிப்பீடு :

அ) வகுப்பறை மதிப்பீடு

1.         பாய்களின் வகைகள் யாவை?

2.         மட்பாண்டக் கலையில் செய்யப்படும் பொருட்களைப் பட்டியலிடுக.

3.         பிரம்புக் கலையில் செய்யப்படும் பொருட்கள் யாவை?

4.         பனையோலையால் உருவாக்கப்படும் பலவகைப் பொருட்கள் யாவை?

5.         மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள் குறித்துக் கூறுக.

ஆ) வளரறி மதிப்பீடு

கைவினைப் பொருட்கள் தொடர்பான படத்தொகுப்பு தயாரித்து வருக.

6. எழுதுதல் :

பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு தமிழ் குறிப்பேட்டில் விடை எழுதி வருதல்.

7. குறைதீர் கற்றல் :

1.      விரைவுத் துலங்கல் குறியீடுகள் மற்றும் மனவரைபடம் மூலமாக மீளக் கற்பித்தல்.

2.      குழுவாக வினா – விடைகளை விவாதம் மற்றும் கலந்துரையாடல் மூலமாகப் புரிந்து கொள்ளுதல்.

*****

 

No comments:

Post a Comment