Monday 24 October 2022

6 வது கணக்கு - மெட்ரிக் அளவைகள் - பாடக்குறிப்பு

மெட்ரிக் அளவைகள் - பாடக்குறிப்பு

வகுப்பு & பாடம்

VI - கணக்கு

அலகு

2

இயல்

அளவைகள்

பாடத்தலைப்புகள்

2.1. அறிமுகம்

2.2. மீள்பார்வை

2.3. மெட்ரிக் அளவைகளில் இனமாற்றம்

2.4. வெவ்வேறு அலகுகளுடைய அளவுகளின் அடிப்படைச் செயல்கள்

கற்கும் முறை

Active Learning Methodology (ALM)

கற்றல் விளைவுகள்            :

604. பணம், நீளம், வெப்பநிலை போன்றவை பயன்படும் பல்வேறு சூழல்களில் பின்னங்கள் மற்றும் தசம பின்னங்களைப் பயன்படுத்துதல்.

1. அறிமுகம்  :

ஆர்மூட்டல்

நினைவு கூர்தல்

மேலாய்வு

கரும்பலகையின் சுற்றளவை சாண், முழம் மற்றும் அளவுகோல் கொண்டு அளந்து கண்டறிதல்.

மெட்ரிக் அளவைகள்

பக்கம் 27 முதல் 35 வரை

2. புரிதல் :

அ) கருத்துச் செயல்பாடு :

மெட்ரிக் அளவைகளில் இனமாற்றத்தை அறியச் செய்தல்.

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

1) 10 லி 5 மி.லி. ஐ மி.லி. ஆக மாற்றுக.

2) 15 கி.மீ. ஐ மீ, செ.மீ. மற்றும் மி.மீ. இல் மாற்றுக.

1) 13000 மி.மீ. ஐ மீட்டராக மாற்றுக.

2) 12 கி.மீ. ஐ மீ, செ.மீ. மற்றும் மி.மீ. இல் மாற்றுக.

3. குழுவேலை :

ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள்

இ) மாணவர் செய்யும் கணக்குகள்

தேன்மொழியின் தற்போதைய உயரம் 1.25 மீ. ஒவ்வோர் ஆண்டும் அவள் 5 செ.மீ. வளருகிறார் என்றால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் உயரம் என்ன?

கீதா 2 லி 250 மி.லி. கொள்ளளவு கொண்ட தண்ணீர்க் குடுவையைக் கொண்டு வந்தாள். அதிலிருந்து அவளுடைய நண்பர்கள் 300 மி.லி. தண்ணீர் குடித்து விட்டனர். குடுவையில் உள்ள மீதித் தண்ணீரின் அளவு எவ்வளவு?

4. வலுவூட்டுதல் :

பக்கம் 35 இல் உள்ள கொள்குறி வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.

5. மதிப்பீடு :

வகுப்பறை மதிப்பீடு

வளரறி மதிப்பீடு

1) 9 மீ 4 செ.மீ. ஐ செ.மீ. ஆக மாற்றுக.

2) 50 கி.கி. ÷ 100 கி.

3) 8257 மி.லி. ஐ கி.லி. மற்று லி. ஆக மாற்றுக.

4) 300 மி.கி. ஐ கிராமாக மாற்றுக.

5) 2 லி கொள்ளளவுள்ள சாடியில் தண்ணீர் நிரப்ப 100 மி.லி. கொள்ளளவு உள்ள குவளைகளில் எத்தனை முறை தண்ணீர் ஊற்ற வேண்டும்?

மெட்ரிக் அளவையில் அமைந்த நீட்டலளவு, நிறுத்தலளவு, முகத்தலளவு அட்டவணையை எழுதி வருக.

6. குறைதீர்க் கற்றல் :

பக்கம் 27 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு.

7. தொடர்பணி :

பயிற்சி 2.1 இல் 9 முதல் 12 வரையுள்ள கணக்குகள்.

*****

No comments:

Post a Comment