நேரியல் சமன்பாடுகள் - பாடக்குறிப்பு
வகுப்பு
& பாடம் |
VIII - கணக்கு |
அலகு |
3 |
பொருண்மை |
இயற்கணிதம் |
பாடத்தலைப்புகள் |
3.8. ஒரு மாறியில் அமைந்த நேரியல் சமன்பாடுகள் |
கற்கும்
முறை |
Active Learning Methodology (ALM) |
கற்றல் விளைவுகள் :
806. மாறிகளைப் பயன்படுத்தி அன்றாட வாழ்க்கைக் கணக்குகளையும் புதிர்களையும் தீர்த்தல்.
1. அறிமுகம் :
ஆர்மூட்டல் |
நினைவு கூர்தல் |
மேலாய்வு |
ஓர் எண்ணின் 4 மடங்கு 96 எனில்
அவ்வெண் யாது? |
மாறிலிகள், மாறிகள்,
எளிய சமன்பாடுகள் |
பக்கம் 100 முதல் லிருந்து
111 வரை |
2. புரிதல் :
அ) கருத்துச்
செயல்பாடு :
2x – 5 = 11 இன் தீர்வு காணுதல்.
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
1) 9y + 12 = 60 இன் தீர்வு காண்க. 2) ஓர் எண் மற்றொர் எண்ணின் 7 மடங்கு ஆகும். அவற்றின்
வித்தியாசம் 18 எனில் அவ்வெண்களைக் காண்க. |
1) 3x – 81 = 27 இன் தீர்வு காண்க. 2) அடுத்தடுத்த மூன்று எண்களின் கூடுதல் 75 எனில் அவற்றுள்
எது பெரிய எண்? |
3. குழுவேலை :
ஆ) ஆசிரியர் செய்யும் கணக்குகள் |
இ) மாணவர் செய்யும் கணக்குகள் |
ஓர் அம்மா தன்னுடைய மகளின் வயதினைப்
போல் 5 மடங்கு வயதில் பெரியவர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மாவின் வயது, மகளின்
வயதைப் போல நான்கு மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன? |
தேன்மொழியின் தற்போதைய வயது முரளியின்
வயதை விட 5 ஆண்டுகள் அதிகம். 5 ஆண்டுகளுக்கு முன்பு தேன்மொழிக்கும் முரளிக்கும் இடையே
இருந்த வயது விகிதம் 3:2 எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன? |
4. வலுவூட்டுதல் :
பக்கம் 111 இல் உள்ள
கொள்குறி வகை வினாக்களுக்கு விடை காணச் செய்தல்.
5. மதிப்பீடு :
வகுப்பறை மதிப்பீடு |
வளரறி மதிப்பீடு |
1) 3m + 15 = 5 இன் மதிப்பு காண்க. 2) ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டுக்கு எத்தனை
தீர்வு உண்டு? 3) இரண்டு எண்களின் கூடுதல் 36. மேலும் அவற்றுள் ஓர்
எண் மற்றோர் எண்ணை விட 8 அதிகம் எனில் அந்த எண்களைக் காண்க. 4) ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண்
யாது? 5) இரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்கங்களின்
கூடுதல் 9. அந்த எண்ணிலிருந்து 27 ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் மாறி விடும்
எனில் அவ்வெண்களைக் காண்க. |
நாட்டுப்புறப் புதிர் கணக்குகளைச் சேகரித்து வருக. |
6. குறைதீர்க் கற்றல் :
பக்கம் 105 இல் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்துதல்.
7. தொடர்பணி :
பயிற்சி 3.6. இல் 5 மற்றும் 6
பயிற்சி 3.7. இல் 9 மற்றும் 10
*****
No comments:
Post a Comment