எதிர் விகிதம் தொடர்பான ஒரு கணக்கீடு
இப்போது ஒரு கணக்கீட்டைப்
பார்ப்போம்.
12 ஆட்கள் ஒரு வேலையை 10
நாட்கள் முடிப்பர் எனில் 20 ஆட்கள் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
இக்கணக்கீட்டை எப்படிச் செய்வது?
ஓர் ஆள் அந்த வேலையை எத்தனை
நாட்களில் முடிப்பார் என்பதை வகுத்துக் கண்டறிந்து அதை 20 ஆல் பெருக்கிக் காணலாம் என்று
சொன்னால் அது தவறாகி விடும்.
மேற்கண்ட கணக்கீடானது எதிர்
விகிதத்தில் அமைந்துள்ளதைக் கவனியுங்கள். ஆட்கள் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆக அதிகரிப்பதால்
வேலை நாட்கள் குறையும் அல்லவா! ஒரு மாறி அதிகரிக்கும் போது இன்னொரு மாறி குறைகிறது.
எனவே இது எதிர் விகிதம். எதிர் விகிதத்தில் நாம் மாறிகளைப் பெருக்கற்காரணியாகத்தானே
எடுக்க வேண்டும். அதாவது ஆட்கள் × நாட்கள் என்று.
12 ஆட்கள் 10 நாட்களில் வேலை
செய்வர் என்பதை 12 × 10 என எடுத்துக் கொள்ள வேண்டும்.
20 ஆட்கள் எத்தனை நாட்களில்
வேலையை முடிப்பர் என்பது தெரியாததால் அதை x என எடுத்துக் கொண்டால் இதற்கான பெருக்கற்காரணி
20 × x என அமையும் அல்லவா!
இப்போது இரு பெருக்கற்காரணிகளையும்
சமன்படுத்தி x இன் மதிப்பைக் காண வேண்டும்.
12 × 10 = 20 × x
120 = 20x
x = 120 / 20
x = 6
எனவே 20 ஆட்கள் அந்த வேலையைச்
செய்தால் 6 நாட்களில் முடிப்பர்.
எவ்வளவு எளிமையாக விடைக்
கண்டறிந்து விட்டோம் பாருங்கள்.
இதே போல் நிறைய கணக்கீடுகளைச்
செய்து பார்க்கும் போது நீங்கள் பேப்பர் – பேனா துணையில்லாமல் மனதுக்குள்ளேயே போட்டு
விடைகளை நொடியில் சொல்லிவிடுவீர்கள்.
அடுத்து என்ன என்கிறீர்களா?
நேர் விகிதத்தைப் பயன்படுத்தி
சதவீதம், தள்ளுபடி, வரிவிதிப்பு தொடர்பான கணக்கீடுகளை எளிமையாகச் செய்ய முடியும். எளிமையாக
மட்டுமல்ல விரைவாகவும் செய்ய முடியும்.
அதைத்தான் அடுத்து பார்க்கப்
போகிறோம்.
*****
No comments:
Post a Comment