Wednesday, 12 October 2022

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள் 13.10.2022 (வியாழன்)

இன்றைய தமிழ் & ஆங்கிலச் செய்திகள்

13.10.2022 (வியாழன்)

தமிழ் செய்திகள்

மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட இருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் மூலமாக படிப்பறிவு அற்றவர்களுக்கும் கல்வி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பட்டாசு விற்க அனுமதி வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் டில்லி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 78 நாட்கள் சம்பளத்தைப் போனஸாக அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எரிவாயு விற்பனையால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு 22000 கோடி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

***  (பள்ளி காலை வழிபாட்டுக் கூட்டத்திற்காக) ***

English News

Mettur Dam again reached its full capacity of 120 feet. A flood warning has been issued for Cauvery coastal areas.

The Tamil Nadu government has announced that India's first Devang sanctuary will be set up in Karur and Dindigul districts.

School Education Minister Anbil Mahesh Poiyamozhi said that it is planned to provide education to the illiterate through the New Bharat Literacy Program.

M.K.Stalin has written a letter to the Chief Minister of Delhi to give permission to sell firecrackers in Delhi.

Diwali bonus announced for railway employees. The Union Cabinet has approved the payment of 78 days salary as bonus.

Aung San Suu Kyi has been sentenced to 26 years in prison by a military court in Myanmar.

The central government has decided to provide a subsidy of 22000 crores to the oil companies to cover the losses caused by the sale of gas.

*** (For School Prayer) ***

No comments:

Post a Comment