தமிழர் இசைக்கருவிகள், தொகைநிலைத் தொடர்கள் - பாடக்குறிப்பு
வகுப்பு & பாடம் |
VIII - தமிழ் |
இயல் |
5 |
பொருண்மை |
கலை, அழகியல், பண்பாடு |
இயல் பகுப்பு |
விரிவானம் & கற்கண்டு |
பாடத்தலைப்பு |
தமிழர் இசைக்கருவிகள் & தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் |
கற்றல் விளைவுகள்
820. கைவினைப் பொருட்கள் தயாரித்தல், கட்டடக்கலை, உழவுத்தொழில், விதை
விதைத்தல், நாட்டியம் மெய்பாடுகள் முதலான செயல்பாடுகளில் பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி
எழுதுதல்.
1. அறிமுகம் :
பக்கம் 104 மற்றும் 110 இல் உள்ள விரைவுத் துலங்கல்
குறியீடுகளைப் பயன்படுத்துதல்.
2. புரிதல் :
அ) படித்தல் :
ஆசிரியர் திருத்தமான உச்சரிப்போடு படிக்க மாணவர்கள் பின்தொடர்தல். அதைத்
தொடர்ந்து மாணவர்கள் படித்துப் புதிய சொற்களை அடிக்கோடிடுதல்.
ஆ) மனவரைபடம்
3. ஒருங்கமைத்தல் :
பின்வரும் தலைப்புகளில் பாடக்
கருத்துகளைத் தொகுத்தல் :
1.
‘தமிழர் இசைக்கருவிகள்’
கூறும் கருவிகள்
2.
தொகைநிலைத் தொடரின்
வகைகள்
3.
தொகாநிலைத் தொடரின்
வகைகள்
4. வலுவூட்டுதல் :
அ) கலந்துரையாடுதல் :
பாடத்தின் திரண்ட கருத்தைக் கலந்துரையாடல் செய்தல்.
ஆ) வழங்குதல் :
தொகுத்தலைத் தனியாகவோ, குழுவாகவோ வழங்குதல்.
5. மதிப்பீடு :
அ) வகுப்பறை மதிப்பீடு
1.
‘தமிழர் இசைக்கருவிகள்’
பாடத்தலைப்பில் கூறப்படும் பல்வேறு இசைக்கருவிகள் பற்றிச் சுருக்கமாக எழுதுக.
2.
தொகைநிலைத் தொடர்கள்
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
3.
தொகாநிலைத் தொடர்கள்
எத்தனை வகைப்படும்? அவை யாவை?
4.
இரவுபகல் என்பது
எவ்வகைத் தொடர்?
5.
அன்மொழித் தொகையை
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
ஆ) வளரறி மதிப்பீடு
‘நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்’ என்ற பாடப்பகுதியில்
இடம் பெற்றுள்ள தொகைநிலை மற்றும் தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிந்து பட்டியலிட்டு வருக.
6. எழுதுதல் :
பாடப்புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு தமிழ் குறிப்பேட்டில் விடை
எழுதி வருதல்.
7. குறைதீர் கற்றல் :
1.
விரைவுத் துலங்கல்
குறியீடுகள் மற்றும் மனவரைபடம் மூலமாக மீளக் கற்பித்தல்.
2.
குழுவாக வினா – விடைகளை
விவாதம் மற்றும் கலந்துரையாடல் மூலமாகப் புரிந்து கொள்ளுதல்.
*****
No comments:
Post a Comment