Wednesday, 26 October 2022

TNSED உட்பட பிற செயலிகள் செயல்படாத போது…

TNSED உட்பட பிற செயலிகள் செயல்படாத போது…

உங்கள் அலைபேசியில் அலைவரிசை சைகைகளின் பலவீனங்களாலோ, அலைவரிசைத் தொடர்ந்து கிடைக்காமையாலோ செயலிகள் இயங்காத போது அதற்குத் துணையாக DNS Changer என்ற செயலியைப் பயன்படுத்தும் போது இயங்காத செயலிகளையும் இயங்குவதையும் காணலாம்.

உதாரணமாக TNSED செயலியில் அலைவரிசைக் கோளாறுகளால் செயலியின் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்படும் போது நீங்கள் DNS Changer செயலியைப் பயன்படுத்தி TNSED செயலியில் செய்ய வேண்டிய பணிகளை அருமையாகச் செய்து முடிக்கலாம்.

இதற்கென நீங்கள் செய்ய வேண்டியது

PLAY STORE இல் DNS Changer என தட்டச்சு செய்து DNS Changer for IPv4/IPv6 என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசமான செயலி.

அல்லது கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.frostnerd.dnschanger

பதிவிறக்கம் செய்து கொண்ட பின் அதன் உள் நுழைந்து Public DNS Porviders என்பதில் Cloudfare என்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு START என்பதைத் தொடுங்கள். DNS Changer ஆனது இப்போது Activate ஆகி விடும்.

இப்போது நீங்கள் எந்தச் செயலியை இயக்க வேண்டுமோ அந்தச் செயலில் சென்று இயக்கிப் பாருங்கள். TNSED செயலி உட்பட இதுவரை இயங்காத அத்தனைச் செயலிகளும் இனி இயங்கத் தொடங்கி விடும்.

செயலியில் உங்கள் பணிகள் முடிந்த பின்பு நீங்கள் DNS Changer இல் சென்று STOP செய்து அதை Inactive செய்து கொள்ளலாம்.

மீண்டும் நீங்கள் எப்போது இயங்காத உங்கள் செயலியை இயங்க வைக்க வேண்டுமோ அப்போது DNS ChangerSTART செய்து கொண்டு இயக்கலாம்.

உங்கள் இணைய இணைப்பு ‘E’ காட்டினாலும் DNS ChangerSTART செய்து கொள்வதன் மூலம் உங்கள் செயலி இயங்குவதை நீங்கள் காணலாம்.

பயனுள்ள இந்தத் தகவல் உங்களுக்குப் பயன்பட்டது என்றால் அனைவருக்கும் பயன்பட பகிருமாறு வேண்டுகிறோம்.

*****

No comments:

Post a Comment