பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) இன்று நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்துக்
கட்சிகளும் கௌரவம் பார்க்காமல் கலந்து கொள்ள முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
2) இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர் குடும்பங்களுக்கு
நாளொன்றுக்கு வழங்கப்படும் ரூ. 350/- நிவாரணத் தொகை ரூ. 500/- ஆக உயர்த்தி வழங்க முதல்வர்
உத்தரவிட்டுள்ளார்.
3) ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்புப் பணி மே மாதம் தொடங்க உள்ளது.
4) இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனத்துக்கு
(ஐஆர்சிடிசி) நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
5) தமிழகம் முழுவதும் 1000 பேருந்துகளை இயற்கை எரிவாயுவால்
இயங்கும் பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
6) வெப்ப வாத பாதிப்பைத் தடுப்பதற்கான வழிமுறைகளை பொது சுகாதாரத்
துறை வெளியிட்டுள்ளது.
7) கிளாம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் மே மாதம் முதல் இயங்கும்.
8) கவிஞர் நந்தலாலா உடல் நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில்
காலமானார்.
9) வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெண்கள் கடன் வாங்குவது
22 சதவீதம் அதிகரித்துள்ளது.
10) ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு
தயாராகும் என உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
English News
1) The Chief Minister has called on all
parties to attend the all-party meeting to be held today.
2) The Chief Minister has ordered that the
daily compensation of Rs. 350/- given to the families of fishermen arrested by
the Sri Lankan Navy be increased to Rs. 500/-.
3) The census of Asian lions is to begin in
May.
4) The Indian Railway Catering and Tourism
Corporation (IRCTC) has been granted Navaratna status.
5) The Tamil Nadu government transport
department has planned to convert 1000 buses across Tamil Nadu to natural
gas-powered buses.
6) The Public Health Department has issued
guidelines to prevent heat stroke.
7) The Kilampakkam railway station will be
operational from May.
8) Poet Nandalala passed away in a Bengaluru
hospital due to ill health.
9) Women have increased their borrowing from
banks and financial institutions by 22 percent.
10) Ukrainian President Volodymyr Zelensky
has announced that Ukraine will only be ready for talks if Russia stops its
aggression.
No comments:
Post a Comment