தமிழ் செய்திகள்
1) மார்ச் 14, 2025 அன்று தாக்கலான தமிழக வரவு செலவுத் திட்டத்தில்
(பட்ஜெட்) மகளிர் மற்றும் மாணவர்களுக்குப் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து
ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை அமலாகும்.
வரும் நிதியாண்டில் 40 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட
உள்ளன.
ஊரகப் பகுதிகளில் ஒரு லட்சம் புதிய வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
சென்னைக்கு அருகில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய நகரம் நிர்மாணிக்கப்பட
உள்ளது.
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
2) வண்டியை நிறுத்துவதற்கு (பார்க்கிங்) இடமிருந்தால் மட்டுமே
சென்னையில் மகிழுந்து (கார்) வாங்க முடியும் என்பதற்கான கட்டுபாடு விரைவில் அமலாக உள்ளது.
3) ஐந்து கோடி ரூபாய் கடன் தொல்லையால் சென்னை, அண்ணா நகரில்
மருத்துவர் பாலமுருகன் என்பவர் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தூக்கிலிட்டுத் தற்கொலை
செய்து கொண்டார்.
4) 2028க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்
என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்துள்ளது.
5) உக்ரைன் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ள நிலையில்
ரஷ்யாவும் போர் நிறுத்தத்திற்குச் சம்மதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட்
டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.
English News
1) The Tamil Nadu Budget presented on March
14, 2025, announced several new schemes for women and students.
The system of surrendering earned leave for
teachers and government employees will be implemented from next year.
40,000 government posts are to be filled in
the coming financial year.
One lakh new houses are to be built in rural
areas.
A new city is to be built on 2,000 acres
near Chennai.
A new airport is to be built in Rameswaram.
2) The restriction that one can buy a car in
Chennai only if there is a parking space is to be implemented soon.
3) Doctor Balamurugan committed suicide with
his wife and two children in Anna Nagar, Chennai due to a debt of five crore
rupees.
4) Morgan Stanley has predicted that India
will become the third largest economy by 2028.
5) US President Donald Trump has set a
condition that Russia must also agree to a ceasefire if Ukraine has agreed to a
ceasefire.
No comments:
Post a Comment