Thursday, 6 March 2025

பிதாகரஸ் தேற்றத்திற்கான ஒரு நிரூபணம்!

பிதாகரஸ் தேற்றத்திற்கான ஒரு நிரூபணம்!

செங்கோண முக்கோணத்தின் கர்ணப் பக்கத்தின் வர்க்கமானது மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம் என்பது பிதாகரஸ் தேற்றம்.

இதை எப்படி நிரூபிப்பது என்பதை இன்று பார்ப்போம்.

பிதகாரஸ் தேற்றத்தை  c2 = a2 + b2 எனச் சமன்பாட்டால் குறிப்பர்.

அதாவது c என்பது இங்கு செங்கோண முக்கோணத்தின் கர்ணப் பக்கம்.

aயும் bயும் அடிப்பக்கம் மற்றும் உயரம், அல்லது உயரம் மற்றும் அடிப்பக்கம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இப்போது c பக்க அளவுள்ள ஒரு சதுரத்தை உருவாக்கினால், அதாவது முக்கோணத்தின் கர்ணப் பக்கத்தைப் பக்கமாகக் கொண்ட ஒரு சதுரத்தை உருவாக்கினால், அதனுள்ளே நீங்கள் aயும், bயும் அடிப்பக்கம் மற்றும் உயரமாகக் கொண்டு நான்கு செங்கோண முக்கோணங்களையும், அத்துடன் (b-a) பக்க அளவுள்ள சதுரத்தையும் காண முடியும்.

இதை நீங்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்.

இப்போது சதுரத்தின் பரப்பு c2.

இப்பரப்பானது உள்ளே உள்ள நான்கு செங்கோண முக்கோணங்களின் பரப்பு மற்றும், (b-a) பக்க அளவுள்ள சதுரத்தின் பரப்பு ஆகியவற்றின் கூடுதலுக்குச் சமம்.

அதாவது,

c2         =  4× ½ ab + (b-a)2

இந்த இடத்தில் (a-b)2 முற்றொருமையைப் பயன்படுத்த வேண்டும்.

எங்கெல்லாம் (a-b)2 பயன்படுகிறது பாருங்கள்.

            = 2ab + b2 – 2ab + a2

            = b2 + a2

c2         = a2 + b2

எனவே தேற்றம் நிரூபணமாகிறது அல்லவா!

பிதாகரஸ் தேற்றத்தின் இப்புதிய நிரூபணம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இப்பிதாகரஸ் தேற்றம்தான் விகிதமுறா எண்களின் கண்டுபிடிப்புக்கும் காரணமாகிறது. அது எப்படி என்பதை நாளை பார்ப்போம்.

*****

No comments:

Post a Comment