எட்டாம் வகுப்பு
இயல் – 3
திருப்புதல்
1)
நோயும் மருந்தும் – மனப்பாடப் பகுதி
பேர்தற்கு
அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு
உரிய திரியோக மருந்துஇவை
ஓர்தல்
தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த
பிணியுள் பிறவார் பெரிது இன்பம் உற்றே.
2)
நோயின் வகைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
நோய்கள்
மூன்று வகைப்படும். அந்நோயின் வகைகளாவன,
1) மருந்தினால் தீரக் கூடிய நோய்கள்,
2) மருந்தினல் தீராத நோய்கள்,
3) தீர்ந்தது போன்று தீராத நோய்கள்.
நோய்களைத்
தீர்ப்பதற்கான மூன்று வகை மருந்துகளாவன,
1) நல்லறிவு,
2) நற்காட்சி,
3) நல்லொழுக்கம்.
3)
வருமுன் காப்போம் – மனப்பாடப் பகுதி
உடலின்
உறுதி உடையவரே
உலகில் இன்பம் உடையவராம்
இடமும்
பொருளும் நோயாளிக்கு
இனிய வாழ்வு தந்திடுமோ?
சுத்தம்
உள்ள இடமெங்கும்
சுகமும் உண்டு நீயதனை
நித்தம்
நித்தம் பேணுவையேல்
நீண்ட ஆயுள் பெறுவாயே!
காலை
மாலை உலாவிநிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத்
தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!
4)
உடல்நலத்துடன் வாழ கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
1) காலையும் மாலையும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
2) நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
3) குளித்த பிறகே உண்ண வேண்டும்.
4) இரவில் நன்றாக உறங்க வேண்டும்.
5) அளவோடு உண்ண வேண்டும்.
6) பசித்த பின்பு உண்ண வேண்டும்.
7) நல்ல நீரைப் பருக வேண்டும்.
5)
தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
தமிழர்
மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன,
1) வேர்,
2) இலை,
3) உலோகங்கள்,
4) பாஷாணங்கள்.
6)
பள்ளிக்குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
1) வரும் முன் காக்கும் வாழ்வை வாழ வேண்டும்.
2) சரியான உணவை உண்ண வேண்டும்.
3) சரியான உடற்பயிற்சியினைச் செய்ய வேண்டும்.
4) சரியான முறையில் உறங்க வேண்டும்.
5) காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ண வேண்டும்.
6) சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7) ஓடியாடி விளையாட வேண்டும்.
8) அதிகாலையில் விழித்தெழ வேண்டும்.
7)
எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
பொருள்
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
இது
பெயரெச்சம், வினையெச்சம் என இரண்டு வகைப்படும்.
*****
No comments:
Post a Comment