பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
எட்டு லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
2) 2023 அக்டோபர் 1க்குப் பிறகு பிறந்தவர்கள் கடவுச்சீட்டு
(பாஸ்போர்ட்) பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
3) நாளை முதல் (மார்ச் 4) தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம்
வரை மட்டுமே இயங்கும், தாம்பரம் வரை இயங்காது.
4) உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம்
வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
5) சென்னை, கொளத்தூரில் பெரியார் மருத்துவமனையைத் திறந்து வைத்து
முதல்வர் பார்வையிட்டார்.
6) வீட்டுவசதி வாரியத்தின் 1500 புதிய குடியிருப்புகளை முதல்வர்
திறந்து வைத்தார்.
7) கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 6 மாவட்ட ஆட்சியர்களைத்
துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
8) மகா கும்பமேளா தேசிய உணர்வுக்குப் புத்துயிர் அளித்துள்ளதாகப்
பிரதமர் தெரிவித்துள்ளார்.
9) சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களைக் கண்காணிக்க நுண்சில்லுகளை
(மைக்ரோசிப்) பொருத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
10) சுங்கத்துறை மற்றும் சரக்கு சேவைத் துறை அதிகாரிகள் கைது
செய்யும் அதிகாரத்தை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.
11) மார்ச் 31க்குப் பிறகு டில்லியில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
12) பிப்ரவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல்
1.84 லட்சம் கோடி ரூபாயாகும்.
13) இந்தியாவின் தனிநபர் நுகர்வு கடந்து ஆண்டுகளை விட இரண்டு
மடங்காக அதிகரித்துள்ளது.
14) தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை
அமெரிக்க நிறுவனங்கள் பணியில் அமர்த்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
English News
1) The Class XII public examinations begin
today. Eight lakh 21 thousand 57 students are appearing for the exam.
2) Birth certificate has been made mandatory
for those born after October 1, 2023 to obtain a passport.
3) From tomorrow (March 4), South District
buses will run only up to Kilampakkam and will not run up to Tambaram.
4) The Chief Minister has announced that the
differently-abled will be given appointed representation in local bodies.
5) The Chief Minister inaugurated the
Periyar Hospital in Kolathur, Chennai and inspected it.
6) The Chief Minister inaugurated 1500 new
flats of the Housing Board.
7) The Chief Minister has ordered 6 District
Collectors to take immediate action following the heavy rain warning.
8) The Prime Minister has said that the Maha
Kumbh Mela has revived national sentiment.
9) Chennai Corporation has started a project
to implant microchips to track dogs on the roads.
10) The Supreme Court has confirmed the
arrest powers of Customs and Excise Department officials.
11) It has been announced that fuel will not
be supplied to vehicles more than 15 years old in Delhi after March 31.
12) Goods and Services Tax (GST) collection
in February is Rs 1.84 lakh crore.
13) India's per capita consumption has
doubled compared to the previous years.
14) US President Donald Trump has said that Indians can be employed by US companies under the Golden Card citizenship scheme.
No comments:
Post a Comment