உங்கள் பணத்தை விட்டு விடாதீர்கள்!
யாரும்
தங்களுடைய பணத்தை இழக்க சம்மதிக்க மாட்டார்கள். சில நேரங்களில் பண இழப்பு இப்படியும்
நடந்து விடுகிறது. காப்பீடு எடுத்து, அது முதிர்வடையும் போது, அதற்கான தொகை வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்பட வேண்டும். ஆனால், வாடிக்கையாளர் முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கான வழிவகையைச்
செய்யாமல் போயிருந்தால் என்ன நடக்கும்?
என்ன
நடக்கும் என்பதை நீங்களே கீழே உள்ள தகவலைப் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.
ஆயுள்
காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி) உரிமை கோரப்படாத வாடிக்கையாளர்களின் தொகை 880 கோடி
உள்ளது. இத்தகவல் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலாகும்.
காப்பீட்டுத்
திட்டங்கள் முதிர்வடைந்து 3 ஆண்டுகளுக்குள் அத்தொகையைப் பெறாவிட்டால், அத்தொகை உரிமை
கோரப்படாத தொகையாகக் கருதப்படுகிறது.
பத்தாண்டுகள்
கழித்தும் அதைப் பெறா விட்டால், அத்தொகையானது மத்திய அரசின் மூத்த குடிமக்கள் நலநிதியில்
சேர்க்கப்பட்டு விடுகிறது.
கஷ்டப்பட்டு
சம்பாதித்த தொகையில் காப்பீடு எடுத்து, அத்தொகை முதிர்வடைந்த பின், இப்படி உரிமை கோரப்படாமல்
போனால், அதனால் காப்பீடு எடுத்தவருக்கோ, அவரின் குடும்பத்துக்கோ என்ன பயன் இருக்க முடியும்?
இந்த
நிலையைத் தவிர்க்க, காப்பீடு எடுக்கும் போதே குடும்பத்தோடு கலந்தாலோசித்து அனைவருக்கும்
தகவல் தெரியும் வகையில் எடுக்க வேண்டும்.
காப்பீடு
எடுப்பவர் வாரிசுதாரர் விவரங்களைக் காப்பீட்டு நிறுவனத்துக்கு அளிக்கும் விண்ணப்பத்தில்
சரியாகப் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
காப்பீடு
முதிர்வடையும் மாதம் மற்றும் ஆண்டைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
காப்பீடு
குறித்த ஆவணங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பதை குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும்
வண்ணம் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்களை வழங்கா விட்டால்
முதிர்வுத் தொகையைப் பெறுவது சிரமமாகி விடும்.
ஆண்டுக்கு
ஒரு முறை குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து ஒவ்வோராண்டும் செய்துள்ள முதலீடு, காப்பீடு,
சேமிப்பு குறித்து கலந்தாலோசித்துக் கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால்
முதலீடு, காப்பீடு மற்றும் சேமிப்பு குறித்த விவரங்கள் மறந்து போவதை அல்லது கவனத்தில்
வராமல் போவதைத் தவிர்த்து விட முடியும்.
உங்கள்
பணம்!
உங்கள்
உடைமை!
அது
உங்கள் உரிமை!
அதை
ஏன் உரிமை கோரப்படாத தொகையாக விட்டு விட வேண்டும்?
யோசியுங்கள்
மக்களே!
தேவையான
நடவடிக்கையை இன்றே எடுங்கள்!
No comments:
Post a Comment