Tuesday, 18 March 2025

எட்டாம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - திருப்புதல்

எட்டாம் வகுப்பு - தமிழ்

இயல் 2

திருப்புதல்

1) ஓடை – மனப்பாடப் பாடல்

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

                                                            (ஓடை ஆட…)

பாட இந்த ஓடை எந்தப்

            பள்ளி சென்று பயின்ற தோடி!

ஏடு போதா இதன்கவிக் கார்

             ஈடு செய்யப் போரா ரோடி!

                                                             (ஓடை ஆட…)

நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

            நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

            குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

                                                            (ஓடை ஆட…)

நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

            நீள் உழைப்பைக் கொடையைக் காட்டிச்

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

            சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்

                                                            (ஓடை ஆட…)

 

2) நீர் நிலைகள் குறித்து சியாட்டல் கூறுவது யாது?

1)  நீரின் முணுமுணுப்புகள் நம் முன்னோர்களின் குரல்களாகும்.

2)  ஆறுகள் நம் உடன் பிறப்புகள் ஆகும்.

3)  நீர் நிலைகள் நம் தாகத்தைத் தீர்க்கின்றன.

4)  நீர் நிலைகள் படகுகளை மிதக்கச் செய்கின்றன.

5)  நீர் நிலைகள் நமக்கு உணவளிக்கின்றன.

6)  ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் தண்ணீரானது நமது முன்னோர்களின் ரத்தமாகும்.

7)  நமது நிலமானது புனிதமானது.

8)  நீர் நிலைகளைக் காக்க குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 

3) எவையெல்லாம் ஒரே குடும்ப எனச் சியாட்டல் கூறுகிறார்?

1)  பூமி நமக்குத் தாயாகும்.

2)  மலர்கள் நமது சகோதரிகள்.

3)  மான்கள், குதிரைகள், கழுகுகள் நமது சகோதரர்கள்.

4)  மலைகள், பசும் புல்வெளிகள், பனித்துளிகள், மனிதர்கள் ஆகிய எல்லாமும் ஒரே குடும்பம் ஆகும்.

 

4) வினைமுற்று என்றால் என்ன?

பொருள் முற்று பெற்ற வினைச்சொல் வினைமுற்று எனப்படும்.

(எ.கா) எழுதினான்

 

5) சான்றோருக்கு அழகாவது யாது?

 பொருளின் எடையைத் தராசு சரியாகக் காட்டும். அதுபோல நடுவுநிலைமையுடன் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.

 

6) புலித்தோல் போர்த்திய பசு பற்றிக் கூறுக.

மன அடக்கம் இல்லாதவரின் தவமானது ஏமாற்று வேலையாகும். அது புலித்தோல் போர்த்திப் பசு மேய்வதைப் போன்றதாகும்.

 

7) திருக்குறள் – மனப்பாடப் பகுதி.

1) தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

2) கணைகொடி யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன

வினைபடு பாலாற் கொளல்.

3) விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

*****

No comments:

Post a Comment