Tuesday, 11 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 12.03.2025 (புதன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்டுகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடியில்) இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

2) ரூ. 515 கோடி முதலீட்டில் நிறுவபட்டுள்ள கோத்ரெஜ் நிறுவனத்தின் தொழிற்சாலையைச் செங்கல்பட்டு அருகே முதல்வர் தொடங்கி வைத்தார்.

3) மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.

4) இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி மொரிசியஸ் சென்றடைந்தார்.

5) சென்னை உயர்நீதி மன்றத்தில் இரு நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

6) ஆயுத இறக்குமதி செய்வதில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. உக்ரைன் முதல் இடத்தில் உள்ளது.

7) மார்ச் 16 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

8) அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் அந்நாட்டுப் பங்குச் சந்தை 4 லட்சம் கோடி சரிவைக் கண்டது.

English News

1) Two seats in the Indian Institute of Technology (IIT) are to be reserved for those who excel in national and international Olympiads.

2) The Chief Minister inaugurated the Godrej factory near Chengalpattu, which has been set up with an investment of Rs. 515 crore.

3) The Chief Minister has announced that products manufactured by women's self-help groups can be carried in government buses up to 25 kg.

4) Prime Minister Narendra Modi reached Mauritius on a two-day visit.

5) Two judges took oath as permanent judges in the Madras High Court.

6) India is second in arms imports. Ukraine is first.

7) NASA has announced that Sunita Williams will return to Earth on March 16.

8) The American stock market saw a decline of 4 lakh crores due to the fall in the market.

No comments:

Post a Comment