பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) இன்றைய கல்வி முறைக்குத் தாயாகத் தமிழகம் இருப்பதாக பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2) அரசு தொடக்கப் பள்ளிகளில் 14 நாட்களில் 67 ஆயிரம் மாணவர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்.
3) தமிழக சட்டசபையில் மார்ச் 14 அன்று மாநிலத்துக்கான வரவு
செலவுத் திட்டமும், மார்ச் 15 அன்று வேளாண்மைக்கான வரவு செலவுத் திட்டமும் தாக்கல்
செய்யப்பட்டன.
4) பள்ளிக்கல்வித் துறைக்கு 46,760 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
5) தமிழகத்தில் 10 புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட
உள்ளன.
6) சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 100 கோடி மதிப்பீட்டில்
அடிப்படை அறிவியல், கணித ஆய்வு மையங்கள் நிறுவப்பட உள்ளன.
7) தமிழகத்தில் 1000 உழவர் சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
8) கேழ்வரகு விளைச்சலில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது.
9) பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் பதிவுக் கட்டணத்தில்
ஒரு சதவீத சலுகை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10) நல்லூர் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட ஐந்து பொருட்களுக்குப்
புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11) சுனிதா வில்லியம்ஸ் நாளை மறுநாள் பூமிக்குத் திரும்புகிறார்.
English News
1) School Education Minister Anbil Mahesh
Poyyamozhi has said that Tamil Nadu is the mother of today's education system.
2) 67 thousand students have been admitted
to government primary schools in 14 days.
3) The state budget will be presented in the
Tamil Nadu Assembly on March 14 and the agriculture budget on March 15.
4) Rs 46,760 crore has been allocated for
the school education department.
5) 10 new government arts and science
colleges are to be established in Tamil Nadu.
6) Basic science and mathematics research
centers are to be established in Chennai and Coimbatore at a cost of Rs 100
crore.
7) 1000 farmer service centers are to be set
up in Tamil Nadu.
8) Tamil Nadu ranks first in the country in
the production of red clover.
9) The Tamil Nadu government has announced
that a one percent concession will be given in the registration fee if a
property is purchased in the name of women.
10) The Tamil Nadu government has announced
that steps will be taken to obtain geographical indication for five products
including Nallur Varagu and Natham Tamarind.
11) Sunitha Williams will return to Earth
the day after tomorrow.
No comments:
Post a Comment