எட்டாம் வகுப்பு
இயல் – 4
திருப்புதல்
1) கல்வி அழகே அழகு – மனப்பாடப் பகுதி
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார்.
2) நீதிநெறி விளக்கப் பாடல் கூறும் கருத்துகள்
யாவை?
1) ஒளிரும் மணிகளால்
செய்யப்பட்ட நகைக்கு அழகூட்ட வேறு மணிகள் தேவையில்லை.
2) கற்றோருக்குக் கல்வியே
அழகாகும். எனவே அவருக்கு அழகூட்ட வேறு எதுவும் தேவையில்லை.
3) திரு.வி.க சங்கப்புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின்
பெயர்களைக் கூறுக.
1) இளங்கோவடிகள்
2) திருத்தக்கத் தேவர்
3) திருஞான சம்பந்தர்
4) ஆண்டாள்
5) சேக்கிழார்
6) கம்பர்
7) பரஞ்சோதி
4) காப்பியக் கல்வி குறித்து திரு.வி.க கூறுவன
யாவை?
1) வாழ்க்கைக்குரிய
இன்பங்களுள் காப்பிய இன்பமும் ஒன்றாகும்.
2) காப்பிய இன்பத்தை
அனுபவிக்க பல தமிழ் இலக்கியங்கள் உள்ளன.
3) இயற்கை ஓவியமாகப்
பத்துப்பாட்டு உள்ளது.
4) இயற்கை இன்பக்கலமாகக்
கலித்தொகை உள்ளது.
5) இயற்கை வாழ்வில்லமாகத்
திருக்குறள் உள்ளது.
6) இயற்கை இன்ப வாழ்வு
நிலையங்களாகச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் உள்ளன.
7) இயற்கைத் தவமாகச்
சிந்தாமணி உள்ளது.
8) இயற்கை அன்பாகப்
பெரிய புராணம் உள்ளது.
9) இயற்கைப் பரிணாமமாகக்
கம்பராமாயணம் உள்ளது.
10) இந்நூல்களைப் படித்து
காப்பிய இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
5) நூலகம் – கட்டுரை எழுதுக.
முன்னுரை :
‘கற்க கசடற’ எனும்
வள்ளுவர் வாக்கிற்கு இணங்க நூல்கள் பலவற்றைக் கற்க துணை நிற்பது நூலகமாகும். இக்கட்டுரையில்
நூலகம் குறித்துக் காண்போம்.
நூலகத்தின் தேவை :
பாடப்புத்தகங்களைத்
தாண்டி அறிவு பெற நூலகம் தேவையாகிறது. ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்
கொள்ளவும் நூலகம் உதவுகிறது.
நூலகத்தின் வகைகள் :
பள்ளி நூலகம், பொது
நூலகம், ஆராய்ச்சி நூலகம், நடமாடும் நூலகம் என அறிவை வளர்த்துக் கொள்ள பல வகை நூலகங்கள்
உள்ளன.
நூலகத்தில் உள்ளவை :
நூலகத்தில் இலக்கியம்,
கலைகள், அறிவியல், வரலாறு, மருத்துவம், ஆன்மீகம், பொறியியல் என பல துறை நூல்களும் இடம்
பெற்றிருக்கும்.
படிக்கும் முறை :
நூலகத்தில் சத்தம்
போட்டு படிக்கக் கூடாது. அமைதியாகப் படிக்க வேண்டும். வாசிக்கும் நூல்களின் முக்கிய
கருத்துகளைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
முடிவுரை :
மலர்களை நாடிச் செல்லும்
வண்டுகளைப் போல, இனிப்பைத் தேடிச் செல்லும் எறும்புகளைப் போல நாமும் நூலகத்தை ஆர்வத்தோடு
நாடி, ஊக்கத்தோடு தேடிச் சென்று பயன் பெறுவோம்.
*****
No comments:
Post a Comment