Wednesday, 5 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 06.03.2025 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) நேற்று தொடங்கிய பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை 8.23 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

2) கல்வியே உயிரினும் மேலானது எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

3) முதல்வர் தலைமையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தற்போதுள்ள நிலையே 30 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

4) தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழகம் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் என்று முதல்வர் அச்சம் தெரிவித்துள்ளார்.

5) விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

6) நாளை வரை தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7) மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 64,000/- ஐக் கடந்தது.

8) இந்தியாவுடன் நல்லுறவைத் தொடர விரும்புவதாக வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

9) ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

10) உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ராணுவ உதவிகளை நிறுத்தி வைக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

11) சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தது. பதிலுக்கு சீனா, கனடா நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிப்பை அமல் படுத்தியுள்ளன.

12) துபாயில் நடைபெற்று வரும் சாதனையாளர் கோப்பை மட்டைப்பந்து போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

English News

1) 8.23 ​​lakh students wrote the Class 11th public examination that began yesterday.

2) The Tamil Nadu Chief Minister has said that education is more important than life.

3) In the all-party meeting on constituency reshuffle chaired by the Chief Minister, it was decided that the current situation should continue for 30 years.

4) The Chief Minister has expressed fear that Tamil Nadu will lose 8 Lok Sabha seats if the constituency reshuffle takes place.

5) The Prime Minister has appealed to the people to be compassionate towards animals.

6) The Meteorological Department has said that the temperature will increase in Tamil Nadu till tomorrow.

7) The price of gold has again crossed 64,000/- per sovereign.

8) Bangladesh's Chief Advisor Mohammad Yunus has said that he wants to continue good relations with India.

9) Trump has announced that additional duties will be imposed on Indian goods in the US from April 2.

10) Donald Trump has ordered the US to suspend military aid to Ukraine.

11) The US imposed additional tariffs on China, Canada and Mexico. In response, China and Canada have also imposed additional tariffs on American goods.

12) The Indian cricket team has defeated Australia in the ongoing Champions Cup in Dubai and qualified for the final.

No comments:

Post a Comment