எட்டாம் வகுப்பு – தமிழ்
இயல் 1
திருப்புதல்
1)
தமிழ்மொழி வாழ்த்து – மனப்பாடப் பகுதி
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய
வாழியவே!
வானம்
அளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி
வாழியவே!
ஏழ்கடல்
வைப்பினும் தன்மணம் வீசி
இசைகொண்டு
வாழியவே!
எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும்
வாழியவே!
2)
உலகம் எவற்றால் ஆனது?
1) நிலம்,
2) நீர்,
3) தீ,
4) காற்று,
5) வானம் ஆகிய ஐந்து பூதங்களால் உலகம் ஆனது.
3)
செய்யுளில் ஏன் மரபை மாற்றக் கூடாது?
1) உலகப் பொருள்களைத் திணை, பால் வேறுபாடு அறிந்து
கூற வேண்டும்.
2) அம்மரபையே செய்யுளிலும் பயன்படுத்த வேண்டும்.
3) இம்மரபு மாறினால் பொருள் மாறி விடும். எனவே மரபை
மாற்றக் கூடாது.
4)
வீரமா முனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் கூறுக.
1) எகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக்
களைந்தார்.
2) ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக்
களைந்தார்.
3) எ என்னும் எழுத்திற்குக் கீழ் கோடிட்டு ஏ என்னும்
எழுத்தை உருவாக்கினார்.
4) ஒ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ஓ என்னும் எழுத்தை
உருவாக்கினார்.
5) ஏகார வரிசை நெடில்களை இரட்டைக்கொம்பு சேர்த்து எழுதினார்.
6) ஓகார வரிசை நெடில்களை இரட்டைக்கொம்புடன் துணைக்கால்
சேர்த்து எழுதினார்.
5)
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
1) உயிரின் முயற்சியால் உள்ளிருந்து காற்று எழுகிறது.
2) இக்காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய
நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்துகிறது.
3) மேலும் இக்காற்றானது இதழ், நாக்கு, பல், மேல்வாய்
ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வெவ்வேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன.
4) இதுவே எழுத்துகளின் பிறப்பு எனப்படுகிறது.
5) இது இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகைப்படும்.
*****
No comments:
Post a Comment