பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) தமிழகம் முழுவதும் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் எனத்
தீர்ப்பளிக்கப்பட்ட 23 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் கல்விச் சான்றிதழ்களும் ரத்துச் செய்யப்படும் எனப்
பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 238 பேரின்
விவரங்களைப் பள்ளிக் கல்வித் துறை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 46 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு நடைபெற்று
வருகிறது.
அரசாணை 121, 2012 இன் படி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள்
மற்றும் பணியாளர்கள் மீது கட்டாய ஓய்வு, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இன் கீழும் பாலியல் குற்றங்களுக்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2) புதுச்சேரியைச் சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மாலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
3) தமிழகத்தின் நாளொன்றிற்கான நிகர மின்சாரப் பயன்பாடு 400
மில்லியன் யூனிட்டுகளைத் தாண்டியது.
4) மொரிசியஸ் அதிபர் தரம்வீர் கோகுலுக்கு கங்கைத் தீர்த்தத்தைப்
பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
5) இந்தியாவில் அடுத்து 20 ஆண்டுகளில் 30000 விமானிகள் தேவைப்படுவர்.
6) நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
7) தமிழகத்திற்கு 7.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்குக்
காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
8) தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9) கூகுளை விட 10 லட்சம் மடங்கு அதிவேகமான கணினியைச் சீனா அறிமுகம்
செய்துள்ளது.
10) உலகின் அதிகம் மாசுபட்டுள்ள நாடுகளில் இந்தியா 5ஆவது இடத்தில்
உள்ளது.
11) அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து போர் நிறுத்தம்
செய்ய உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
English News
1) 23 teachers and government employees who
were found guilty of sexual offences across Tamil Nadu have been dismissed.
The School Education Department has said
that their educational certificates will also be disqualified.
The School Education Department is
continuously examining the details of 238 people involved in sexual offences
across Tamil Nadu.
POCSO cases are pending against 46 teachers
across Tamil Nadu.
As per Government Order 121, 2012, action
including compulsory retirement and dismissal is taken against teachers and
employees involved in sexual offences.
Action is also being taken for sexual
offences under Government Servants Code of Conduct 19 (2).
2) A scheme to provide evening snacks in
government and government-aided schools in Puducherry has been announced.
3) Tamil Nadu's net electricity consumption
for a day has crossed 400 million units.
4) Prime Minister Narendra Modi presented
Ganga Theertham to Mauritius President Dharamvir Gokul.
5) India will need 30,000 pilots in the next
20 years.
6) The central government has warned that
strict action will be taken if irregularities are involved in the 100-day
employment scheme.
7) The Cauvery Regulatory Authority has
ordered Karnataka to release 7.5 TMC of water to Tamil Nadu.
8) The Meteorological Department has said
that 21 districts in Tamil Nadu are likely to receive rain.
9) China has introduced a computer that is 1
million times faster than Google.
10) India is the 5th most polluted country
in the world.
11) Ukraine has agreed to a ceasefire following
US pressure.
No comments:
Post a Comment