Wednesday, 19 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 20.03.2025 (வியாழன்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) 4552 அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனைச் சோதிக்கும் 100 நாள் சவாலைத் தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

2) நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு கிடைத்தால் பள்ளிக் கல்வியின் 65 சதவீத பிரச்சனைகள் நிறைவடையும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

3) சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் மார்ஷல் உருவச் சிலையைத் தமிழக முதல்வர் எழும்பூர் அருங்காட்சியகத்தில் திறந்து வைத்தார்.

4) மகா கும்பமேளா நாட்டின் ஒற்றுமையை வலுபடுத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

5) தொடர்வண்டி விபத்துகள் 95 சதவீதம் குறைந்திருப்பதாக தொடர்வண்டித் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

6) இலண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

7) நாட்டின் முதல் ஹைட்ரஜன் தொடர்வண்டியைச் சென்னை தொடர்வண்டி பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ஐசிஎப்) தயாரிக்க உள்ளது.

8) ஒன்பது மாதங்களுக்குப் பிறகு (286 நாட்களுக்குப் பிறகு) சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்பினார்.

9) ஒரு சவரன் தங்கத்தின் விலை 66 ஆயிரத்தை நெருங்கியது.

10) புதுச்சேரியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கான பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11) பெயர்ப் பலகைகள் தமிழில் அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.

English News

1) The Primary Education Department has announced a 100-day challenge to test the learning ability of students in 4552 government schools.

2) School Education Minister Anbil Mahesh Poyyamozhi has said that 65 percent of the problems of school education will be solved if the court cases are resolved.

3) The Tamil Nadu Chief Minister unveiled the statue of Sir John Marshall, who revealed the Indus Valley Civilization, at the Egmore Museum.

4) The Prime Minister has said that the Maha Kumbh Mela has strengthened the unity of the country.

5) Railway Minister Ashwini Vaishnav has said that train accidents have decreased by 95 percent.

6) The Prime Minister has praised music composer Ilayaraja for staging a symphony in London.

7) The Chennai Integrated Coach Factory (ICF) is to manufacture the country's first hydrogen train.

8) Sunitha Williams returned to Earth safely after nine months (286 days).

9) The price of a sovereign of gold approached 66 thousand.

10) It has been announced that household items for family card holders in Puducherry will be delivered to their homes.

11) The Puducherry state government has announced that name boards should be put up in Tamil.

No comments:

Post a Comment