Monday, 17 March 2025

இன்றைய கல்வி & பொதுஅறிவுச் செய்திகள் – 18.03.2025 (செவ்வாய்)

பள்ளிக் காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்

தமிழ் செய்திகள்

1) மொழிக்கொள்கையின் உறுதியினைக் காட்டவே நிதிநிலை அறிக்கையில் ‘ரூ லட்சினைக்குறி பயன்படுத்தப்பட்டதாகத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

2) இந்தியா – சீனா இடையே ஆரோக்கியமான போட்டி அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

3) சந்திராயன் – 5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

4) அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்யும் கடன் செயலிகளை நம்ப வேண்டாம் என இணையக் குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.

5) இணையவழி மோசடிகளால் கடந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ளோர் 1600 கோடியை இழந்துள்ளனர்.

6) இவ்வாண்டு சர்வதேச எண்ம மாற்ற விருது எண்ம முன்முயற்சிகளுக்காக இந்திய நடுவண் வங்கிக்கு (ஆர்பிஐ) வழங்கப்படுகிறது.

7) காற்று மாசு அதிகமுள்ள நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

8) உலக அளவில் இறைச்சி நுகர்வில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.

9) 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விருதுகளுக்கு மத்திய அரசின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

10) நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பினார்.

11) தமிழ்நாட்டில் அடுத்து வரும் ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

12) சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலம் சென்றடைந்தது.

13) வரும் காலாண்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

14) நடிகை பிந்துகோஷ் உடல்நலக் குறைவால் காலமானார்.

15) எழுத்தாளர் நாறும்பூநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.

English News

1) The Tamil Nadu Chief Minister has said that the ‘Ru’ symbol was used in the budget statement to show the determination of the language policy.

2) Prime Minister Narendra Modi has said that healthy competition between India and China is necessary.

3) The Central Government has approved the Chandrayaan-5 project.

4) The Cyber ​​Crime Police has said that should not trust loan apps downloaded on mobile phones.

5) People in Tamil Nadu lost 1600 crores last year due to online frauds.

6) This year, the International Digital Change Award is being given to the Reserve Bank of India (RBI) for its initiatives.

7) India has ranked fifth among the countries with the highest air pollution.

8) India ranks last in meat consumption globally.

9) The Central Government has announced that applications for the Padma Awards for the year 2026 are being invited. Applications for the Padma Awards can be applied for through the Central Government’s website.

10) Music composer A.R. Rahman, who was admitted to the hospital due to chest pain, returned home safely after treatment.

11) Moderate rains are likely in Tamil Nadu for the next six days.

12) Dragon spacecraft reaches the International Space Station to bring Sunitha Williams.

13) The UN has said that there is a possibility of an economic slowdown in the coming quarter.

14) Actress Bindukosh passes away due to health problems.

15) Writer Narumpoonathan passes away due to health problems.

No comments:

Post a Comment