பள்ளிக்
காலை வழிபாட்டு நிகழ்வுக்கான இன்றைய செய்திகள்
தமிழ் செய்திகள்
1) வேலியண்ட் என்ற தலைப்பில் இளையராஜா உருவாக்கிய சிம்பொனி
இசை லண்டனில் அரங்கேறியது. இசை ரசிகர்கள் மெய்மறந்து இளையராஜாவின் இசையை அனுபவித்தனர்.
2) நாடாளுமன்றத்தின் இரண்டாவது வரவு – செலவு கூட்டத்தொடர் இன்று
தொடங்குகிறது.
3) தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில்
பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4) 4.25 கோடியில் 17 பசுமைக் காடுகள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல்
வழங்கியுள்ளது.
5) பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர்
காவல் நிலையங்களைத் தமிழக அரசு அமைத்துள்ளது.
6) பிரதமர் நரேந்தி மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது
வழங்கப்பட்டுள்ளது.
7) புழல் சிறை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதாக உயர்நீதிமன்றம்
தமிழக அரசுக்குப் பாரட்டு தெரிவித்துள்ளது.
8) தமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9) மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது நளினி ஜமீலாவின்
‘என்டே ஆண்கள்’ என்ற சுயசரிதையை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த ப. விமலாவுக்கு
வழங்கப்படுகிறது.
10) மார்ச் 13, 14 ஆம் தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில்
நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. நிலவு சிவப்பு
நிறத்தில் காட்சியளிக்கும் இந்த நிகழ்வு Blood Moon எனப்படுகிறது. ரேலீ சிதறல் காரணமாக
சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு
வருகிறது. இந்த சந்திர கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும்.
English News
1) The symphony music composed by Ilayaraja
titled Valiant was staged in London. Music fans were mesmerized and enjoyed
Ilayaraja's music.
2) The second budget session of Parliament
begins today.
3) A public interest litigation has been
filed in the Supreme Court seeking the implementation of the three-language
policy in Tamil Nadu.
4) The Tamil Nadu government has approved
the establishment of 17 green forests at a cost of Rs 4.25 crore.
5) The Tamil Nadu government has set up 39
new women's police stations to prevent crimes against women.
6) Prime Minister Narendra Modi has been
awarded the highest award of Barbados.
7) The High Court has praised the Tamil Nadu
government for maintaining the Puzhal prison well.
8) The Meteorological Department has said
that there is a possibility of rain in Tamil Nadu from today.
9) The Sahitya Akademi Award for Translation
is given to P. Vimala, who translated Nalini Jamila's autobiography 'Ente
Aangal' into 'Enathu Aangal'
10) A rare event will occur during the lunar
eclipse that will occur on March 13 and 14. This event, in which the moon
appears red, is called Blood Moon. The red color of the moon occurs due to
Rayleigh scattering. This event is currently occurring for 2 days after 2022.
This lunar eclipse will last for about 5 hours.
No comments:
Post a Comment