இன்று தேசிய பாதுகாப்பு தினம் – மார்ச் 4
1971, மார்ச் 4 இல்
தொழிலாளர்களுக்கான தேசிய பாதுகாப்பு அமைப்பு (கௌன்சில்) நிறுவப்பட்டது. இதன் தலைமையகம்
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் உள்ளது.
1972லிருந்து தேசிய
பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது 2025 இல் நாம் கொண்டாடுவது 54 ஆவது தேசிய
பாதுகாப்பு தினமாகும்.
தொழிலாளர்கள் விபத்தின்றிப்
பாதுகாப்பான முறையில் பணியாற்றிடவும், உடல் நலனும் சுற்றுச்சூழலும் பாதிக்காத வண்ணம்
இயங்கிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நாளானது நாடு தழுவிய அளவில் கொண்டாடப்படுகிறது.
இத்தினம் கொண்டாடப்படுவதன் நோக்கங்கள் :
1) பாதுகாப்பு கலாச்சாரத்தை
ஊக்குவித்தல்
2) பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரித்தல்
3) பணியிட விபத்துகளைக்
குறைத்தல்
4) பாதுகாப்பு விதிகளை
உறுதி செய்தல்
5) பாதுகாப்பு தொழில்நுட்ப
கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் ஆகியனவாகும்.
விபத்துகளுக்கான எதிர்வினையை
விட பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை இவ்விழிப்புணர் தினம் ஊக்குவிக்கிறது.
அத்துடன் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பாதுகாப்பின் பங்கை வலியுறுத்துகிறது. மேலும்
உடல், மனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பை வலியுறுத்துகிறது. எல்லாவற்றுக்கும்
மேலாகப் பாதுகாப்பு விதிகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதை வலுபடுத்த ஆவன செய்கிறது.
*****
No comments:
Post a Comment