இன்றைய கல்வி & பொதுஅறிவுச்
செய்திகள் – 04.03.2025 (செவ்வாய்)
பள்ளி காலை
வழிபாட்டு நிகழ்வுக்கான
தமிழ் மற்றும்
ஆங்கிலச் செய்திகள்!
தமிழ்ச் செய்திகள்
1) நாகை புதிய பேருந்து நிலையத்தில் 105 புதிய
பேருந்துகளின் சேவையைத் தமிழக முதல்வர்
தொடங்கி வைத்தார்.
2) பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் பதற்றமின்றித் தன்னம்பிக்கையுடன்
எதிர்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
3) நான் முதல்வன் திட்டத்தில் 41.3 லட்சம் மாணவர்கள்
இதுவரை பயன் பெற்றுள்ளனர்.
4) மார்ச் 8 இல் இளையராஜா லண்டனில் நடத்த உள்ள சிம்பொனி
இசை நிகழ்வுக்குத் தமிழக முதல்வர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
5) தமிழக வரவு செலவுத் திட்டத்தோடு (பட்ஜெட்) பொருளாதார ஆய்வறிக்கையையும்
தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
6) நாளை நடைபெறும்
அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் தவறாது பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.
7) போதைப் பொருள்களுக்கான எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரமாகச்
செயல்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
8) வரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி
செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9) அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அறிவித்து
உத்தரவிட்டார் டொனால்ட் டிரம்ப்.
10) 97 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அனோரா
திரைப்படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
English News
1) The Tamil Nadu Chief Minister
inaugurated the service of 105 new buses at the Nagai New Bus Stand.
2) The Chief Minister has advised
students writing public exams to face them with confidence without tension.
3) 41.3 lakh students have benefited
so far under the ‘Naan Muthalvan’ scheme.
4) The Tamil Nadu Chief Minister
personally met and congratulated Ilayaraja for the symphony music event to be
held in London on March 8.
5) The Tamil Nadu government plans to
present the Economic Survey along with the Tamil Nadu Budget.
6) The Chief Minister has invited all
parties to participate in the all-party meeting to be held tomorrow.
7) Home Minister Amit Shah has said
that the central government is working hard in the fight against drugs.
8) The Meteorological Department has
said that the temperature in Tamil Nadu will increase by up to 3 degrees
Celsius in the coming days.
9) Donald Trump has declared English
as the official language of the United States.
10) The 97th Academy Awards ceremony
was held in Los Angeles. The film Anora won 5 Oscars.
No comments:
Post a Comment